Print this page

அரசியல் கட்சிகளின் மே தின தீர்மானம்

பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு மே தின கூட்டங்களை கைவிடுவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,. உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இலங்கை மன்றக்கல்லூரியில் நினைவு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணி தமது கட்சி தலைமையகத்தில் நினைவு நிகழ்வொன்றை நடத்தவுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பத்தரமுல்லையில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் மே தினத்தை கொண்டாடவுள்ளது.

மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியன இன்றைய மே தினத்தை பிரார்த்தனை மற்றும் அஞ்லி நிகழ்வாக நடத்த தீர்மானித்துள்ளன.