Print this page

பிரபல ஐஸ் போதைப் பொருள் கடத்தல்காரர் கைது

November 04, 2022

ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிக்கும் பிரபல ஐஸ் போதைப்பொருள் வியாபாரி நேற்றிரவு அரபா நகரில் வைத்து 16 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

28 வயதையுடையவர் இவர் ஓட்டமாவடி பிரதேசத்தில் வசிப்பவர் என்பதுடன், இவரிடமிருந்து 16 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய கதிரவெளி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருளை விற்பனைக்கு கொண்டு சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் போதைப் பொருள் விற்பனை செய்த ஒரு தொகைப்பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இவரை பல்வேறு தடவைகளில் கைது செய்ய முயற்சித்தும் சாதுர்யமாக தப்பித்து வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்ட நடவடிக்கைக்காக சந்தேகநபர் வாழைச்சேனை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.