Print this page

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது


500 கோடி ரூபாய் பெறுமதியான வைரம் மற்றும் 200 கோடி ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் கொள்ளை மற்றும் வௌிநாட்டு நபர் ஒருவரை கடத்தியமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீபே பொலிஸ் பிரிவின் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரவ்வில பிரதேசத்தில் நேற்று பகல் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சந்தேக நபர் கைசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கங்கொடவில நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.