Print this page

காலநிலையில் மீண்டும் மாற்றம்

November 10, 2022

இலங்கையின் தென்கிழக்கில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான நிலை தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வளரக்கூடும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால், நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.