Print this page

சிறையில் சிறப்பு சலுகை அனுபவிக்கும் ஜானகி

November 18, 2022

திலினி பிரியமாலியுடன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன தனது தொடர்புகளைப் பயன்படுத்தி விளக்கமறியலில் உள்ள கைதிகளின் அறைகளை மாற்றியமைப்பதாக சுதந்திர ஊடகவியலாளரும் முன்னாள் விமானப்படை அதிகாரியுமான கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். .

யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜானகி சிறிவர்தன சிறைச்சாலையில் அதிகாரங்களுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

ஜானகி சிறிவர்தன முன்னாள் லிபிய ஜனாதிபதி கடாபியுடன் தொடர்புகளை வைத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.