Print this page

மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்றிரவு உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினரால் நேற்றைய தினம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் மற்றும் சிற்றுண்டிச்சாலை பணியாளர் ஆகிய 3 பேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியார் நேற்றிரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், குறித்த இரண்டு மாணவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.