Print this page

15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு 45 ஆண்டுகள் சிறை

November 30, 2022

தனது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கி, குழந்தையைப் பெற்றெடுக்க ஏற்பாடு செய்த நபருக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி ருச்சிர வெலிவத்த, சந்தேகநபருக்கு மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் தலா 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து, சிறைத்தண்டனையை ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை நிஸ்ஸங்கமல்லபுர பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர், 2015 முதல் தனது மகளை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.