spot_img

ஜெயம் ரவியின் – ஆர்த்தி விவாகரத்து! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான விவாகரத்து வழக்கு தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதியாக, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆர்த்தி ரவி தாக்கல் செய்திருந்த இடைக்கால ஜீவனாம்ச மனு தற்போது முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனுவில், தனது இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவுகள், அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மற்றும் குடும்பம் இதுவரை வாழ்ந்துவந்த வாழ்க்கைத் தரத்தைத் தொடர்ந்து பராமரிக்க மாதந்தோறும் ரூ.40 லட்சம் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று ஆர்த்தி ரவி கோரியிருந்தார்.

இந்த மனுவை விரைந்து விசாரித்து முடிவு எடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே குடும்ப நல நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி ரவியின் கோரிக்கையை குடும்ப நல நீதிமன்றம் ஏற்கவில்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, மாதம் ரூ.3 லட்சம் இடைக்கால ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ரவி மோகன் தனது இரண்டு மகன்களையும் நீதிமன்றம் விதித்துள்ள குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீப காலமாக ரவி மோகனின் செய்தியாளர் சந்திப்பு, கெனிஷா பிரான்சிஸ் தொடர்பான சர்ச்சைகள் மற்றும் ஆர்த்தி ரவியின் சமூக வலைதள பதிவுகள் ஆகியவை இந்த வழக்கை பொதுமக்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விவகாரமாக மாற்றியுள்ளன.

spot_img

Latest articles

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

More like this

இந்திய கிரிக்கெட் அணி உதவி பயிற்சியாளர் பதவி விலகல்

இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராகச் செயல்பட்டு வந்த நெதர்லாந்து அணியின் முன்னாள் சகல துறை ஆட்டக்காரரான ரயன் டென் டோஷ்கேட் தனது...

மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

-கொல்கத்தாவில் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பு! ​தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...

தமிழ் சினிமா அருங்காட்சியகம்: காலத்தின் தேவை

உலகள​வில் சினிமா பொழுது​போக்கு ஊடக​மாக மட்​டுமே சுருங்​கும்​போது, தமிழ்​நாட்​டிலோ அது கலை, பண்​பாடு, அரசி​யலுடன் பிரிக்க முடி​யாத​படி பிணைந்​துள்​ளது....