web log free
December 07, 2021

DFCC வங்கி வியப்பூட்டும் நன்மைகளுடன் World Mastercard கடனட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது

04 அக்டோபர், 2021: அனைவருக்கும் ஏற்ற வங்கியான DFCC வங்கியானது, DFCC World Mastercard கடனட்டையை அறிமுகப்படுத்தியுள்ளதை பெரும் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளதுடன், இது தற்போதைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறுகிறது. தங்களது கொள்வனவு வலுவினை மேம்படுத்துவதற்கு புதிய வாய்ப்புக்களை தேடுகின்ற தொழில் வல்லுநர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு இந்த அட்டை மிகவும் நேர்த்தியானது.

அட்டைதாரர்கள் அனைவருக்குமே அனைத்து மற்றும் தெரிந்தெடுக்கப்பட்ட பரிவர்த்தனை வகைகளுக்கு 1% முதல் 1.5% வரை பண மீளளிப்பு, எதிர்பாராத சூழ்நிலைகளில் மீள்கொடுப்பனவுப் பாதுகாப்பை உள்ளடக்கிய சிறு தொகை வருடாந்த கட்டணத்துடன் விசேட காப்புறுதித் திட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி,  உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் திருட்டு, இழப்பு அல்லது இரண்டினாலும் மோசடி முறையில் அட்டையை உபயோகிப்பதிலிருந்து பாதுகாக்க ‘wallet guard’ காப்புறுதி வசதி உள்ளிட்ட பரந்த வகைப்பட்ட அற்புதமான  சலுகைகள் கிடைக்கப்பெறுகின்றன. இது கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், திறப்புக்கள், தேசிய அடையாள அட்டை மற்றும் பண இழப்பு போன்ற இழந்த அல்லது திருடப்பட்ட ஏனைய மதிப்புமிக்க பொருட்களை மீட்டெடுக்க உதவுவதுடன், Mastercard வழங்கும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்புகின்றவாறு ஏற்கனவே வைத்துள்ள கடனட்டையிலுள்ள கடன் வரம்பினை பாகங்களாக பிரித்தோ அல்லது புதிய அட்டைக்கென தனித்த கடன் வரம்பினைக் கோரியோ தற்போது இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

புதிய கடனட்டையை அறிமுகப்படுத்தியமை தொடர்பில் DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “புதிய DFCC World Mastercard கடனட்டை, டிஜிட்டல் வசதி கொண்ட வாடிக்கையாளர் மைய வங்கியாக நம்மை உண்மையாக குறிப்பிடும்படியான ஒரு ஸ்தானத்தில் நிலைநிறுத்துவதற்கான நமது தொலைநோக்கிற்கு இணங்க வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு முக்கியமான படியாகும். எங்கள் தயாரிப்பு வரிசையில் Mastercard இனை கொண்டுவருவதில் நாங்கள் பெருமிதம் கொள்வதுடன், இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிதித் தேவைகளுக்கு ஏற்றவாறு மிகச் சிறந்த அட்டைகளைத் தெரிவு செய்ய பல்வேறு அட்டைகளை வழங்குகிறோம். இந்த அட்டையானது கொள்வனவுச் சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பண மீளளிப்புத் தெரிவுகள் முதல் விசேடமயமான காப்புறுதித் திட்டங்கள் வரை ஏராளமான புதிய நன்மைகளை வழங்குகிறது. இவை அனைத்தும் விசுவாசத்தையும் நிதியியல் பாதுகாப்பையும் மேம்படுத்த இடமளித்துள்ளன,” என்று குறிப்பிட்டார்.

இந்த நடவடிக்கையின் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கி, Mastercard இன் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான முகாமையாளரான ராஜேஷ் மணி அவர்கள் கருத்து வெளியிடுகையில், “தற்போது இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் முன்னெப்போதுமில்லாத எழுச்சியை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இதைப் போன்ற புதிய, மூலோபாயம்மிக்க கூட்டாண்மைகளை ஏற்படுத்திக் கொள்வதுஅத்தகைய எழுச்சியை மேலும் விரைவுபடுத்துவதற்கு உதவுவது மட்டுமன்றி, மத்திய வங்கியின் டிஜிட்டல் 2020  தொலைநோக்கிற்கு அமைவாக, பண வடிவத்தை  குறைந்த அளவில் உபயோகித்து டிஜிட்டல் வடிவத்தினை கூடுதலான அளவில் உபயோகிக்கின்ற சமுதாயத்தை வளர்க்கவும் வழிவகுக்கும். எதிலும் சிறப்பினையே நாடுகின்ற DFCC வங்கியின்  வாடிக்கையாளர்கள் Mastercard மூலமாக டிஜிட்டல் கொடுப்பனவுகளை சௌகரியமாகவும், விரைவாகவும் முன்னெடுக்கின்ற அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கின்ற வகையில் அந்த வங்கியுடன் கைகோர்ப்பதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்          

 DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. 

 

Last modified on Thursday, 14 October 2021 09:40
© 2021 All Rights Reserved by Asian Mirror Pvt Ltd