Print this page

சீரகத்தில் ஓர் அழகு குறிப்பு

December 16, 2021

நம் முகத்தில் இருக்கும் சிறு சிறு கரும்புள்ளிகளும், முகப்பருவும் நம் முக அழகை முற்றிலுமாக சீர்குலைக்குமாறு அமைந்திருக்கும். வெயில், தூசு, மாசு போன்ற காரணங்களால் நம் முகத்தில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து வறண்டு போய் அழகற்ற சருமம் போன்ற பிரச்சனைகள் தலை தூக்க ஆரம்பிக்கின்றன. அல்லது அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு உள்ள சருமத்தில் அழுக்குகள் சேர்ந்து முக அழகை கெடுத்துக் கொண்டிருக்கும். எது எப்படி ஆனாலும் எல்லா வகையான முகத்திற்கு ஏற்ப இந்த சீரக பேக்கை எப்படி பயன்படுத்துவது? என்பதை இப்போது தெரிந்து கொள்ள இருக்கிறோம்,

முதலில் உங்களுடைய முகத்தை நன்கு சுத்தமான தண்ணீரை கொண்டு கழுவிக் கொள்ளுங்கள். எப்பொழுதும் முகத்தை கழுவிய பின்பு டவல் கொண்டு அழுத்தி ஈரப்பதத்தை எடுக்க வேண்டுமே தவிர, டவலால் முகத்தை தேய்த்து துடைக்கக் கூடாது. இப்படி செய்யும் பொழுது தான் ஒரு இடத்தில் இருக்கும் முகப்பருக்கள் இன்னொரு இடத்திலும் பரவுகிறது. லேசாக ஒற்றி எடுத்துவிட்டு முகத்தை உலர விட்டு விடுங்கள்.

பின்னர் உங்களுக்கு தேவையான அளவிற்கு சீரகத்தை ஒரு வாணலில் போட்டு லேசாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். சீரகம் கருகிவிடக் கூடாது! மிதமான தீயில் வைத்து வாசம் வர நன்கு பொன் நிறத்தில் வரும் வரை வறுத்து அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் இந்த சீரகத்தை மிக்ஸியில் போட்டு நைஸாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்த இந்த பவுடரை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான நேரத்தில் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது ஒரு சிறிய பௌலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு முல்தாணிமட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். முல்தானிமட்டி என்பது ஒரு மண் வகை ஆகும். முல்தானிமட்டி உலகில் பெருமளவு முக அழகிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை வெறுமனே நாம் முகத்தில் பேக் போல போட்டு வைத்தால் முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு நாளடைவில் குறைவடையும். 

இதனுடன் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நீங்கள் அரைத்து வைத்துள்ள சீரகத் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். சீரகத்தில் இருக்கும் அதிகப்படியான விட்டமின் E சத்து முகத்தில் இருக்கும் தேவையற்ற அழுக்குகளை நீக்கி முகத்தில் இருக்கும் மெலனின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதனுடன் நீங்கள் ஒரு டீஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயிரில் இருக்கும் மாய்சுரைசர் இயல்பாகவே நம் முகத்திற்கு பொலிவை கொடுக்கும். சுத்தமான பசுந்தயிராக இருப்பது நல்லது.

இந்த மூன்று பொருட்களையும் சம அளவில் எடுத்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஒரு பிரஷ் கொண்டு நன்கு தடவி கொள்ளுங்கள். பத்து நிமிடம் அப்படியே உலர விட்டு விட வேண்டும். முகத்தில் இருக்கும் ஈரப்பதம் முழுமையாக நீங்கும் வரை அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள். நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவிக் கொள்ளுங்கள். முகத்தை கழுவியதும் சுத்தமான டவல் எடுத்து அழுத்தம் கொடுத்து ஒற்றி எடுத்துவிடுங்கள். அவ்வளவுதாங்க இது இரண்டு நாள் செஞ்சு பாருங்க, உங்க முகமா இது? என்று நீங்களே ஆச்சரியப்பட்டு போய்விடுவீங்க! அந்த அளவிற்கு நல்ல ரிசல்டை கொடுக்கும். இந்த ஃபேஸ் பேக் நிச்சயம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.