Print this page

தொண்டை வலி நிவாரணம்

December 17, 2021

 

1) சிறிதளவு இஞ்சியை வாயிலிட்டு மென்று உமிழ்நீரை துப்பி விடாமல் குரல்வளை மூலம் உள்ளுக்கு சாப்பிட்டால் தொண்டைப் புண் குணமாகும். 

 

2) தேங்காய்ப்பால் , மணத்தக்காளி சாறு இவற்றை சம அளவு கலந்து 50 - 100 மில்லி குடித்து வரலாம். 

 

3) தேங்காய் பாலில் மாசிக்காய் & வசம்புத்துண்டை உரைத்து சாப்பிட தொண்டை புண் குணமாகும்.  

 

4) இஞ்சியுடன் 4 கிராம்பு சேர்த்து விழுதாக அரைத்து சிறிது சுடாக்கி தொண்டையின் மேல் பூசி வரவும்.  

 

5) இரண்டு எலுமிச்சம்பழச் சாறுடன் தண்ணீர் கலந்து தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளிக்கவும். 

 

6) அதிமதுரம் , சுக்கு , சித்தரத்தை இவற்றை பொடி செய்து பாலில் கலந்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வலி குறையும்.  

 

7) முல்லைப்பூ இலையை நெய்யில் வதக்கி ஒத்தடம் இட தொண்டை வலி குறையும்.  

 

8) மாதுளம்பூவை இடித்து சாறுபிழிந்து அதைக் காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேன் கலந்து உட்கொண்டு வர தொண்டை புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.  

 

9) முருங்கை வேர் பட்டை அல்லது எலுமிச்சைப் பழச்சாற்றை வெண்ணீரில் உப்புபோட்டு கலக்கி தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் & கரகரப்பு குணமாகும்.  

 

10) வசம்பு துண்டு ஒன்றை வாயில் அடக்கி கொள்ள தொண்டை கட்டு குணமாகும்.   

 

11) நீரைக்கொதிக்க வைத்து வேப்பம் பூவைப் போட்டு ஆவியை வாய் வழியாக உள்ளிழுக்க இந்த ஆவியினால் வரட்டு இருமல் , தொண்டைப்புண் , தொண்டை வலி குணமாகும்.  

 

12) வெந்நீரில் உப்பு போட்டு கலக்கி சிறிது எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளித்து வந்தால் மேற்கூரிய நோய்கள் நீங்கும்.

- S. நிரோஷினி -

 

Last modified on Friday, 17 December 2021 08:24