Print this page

உன்னுடன் நினைவுகளை உருவாக்குவதை நான் ஒருபோதும் நிறுத்த விரும்பவில்லை

பள்ளியறையில் மட்டுமல்ல சமையலறையிலும் அவளுக்கு துணை கொடு...

மாதத்தில் மூன்று நாட்கள் மனைவிக்கு தாயாகு.. மற்ற நாளெல்லாம் சேயாகு..

இரவிலே தாமதித்து இல்லம் செல்வதை இயன்றவரை குறைத்திடு...

இயலாத நிலையில் அவள் இருந்திடக் கண்டாலே , உறவுதனைத் தவிர்த்திடு..

சின்னச் சின்ன சண்டைகள் தினந்தோறும் போட்டுக்கொள்.. சினஞ்கூடி பெருஞ்சண்டை வராமல் பார்த்துக்கொள்...

அவள் கர்ப்பம் சுமைக்கையில் 

நீ அவளைச் சுமந்திடு...

விடுமுறை நாட்களில் காலைவரை அவள் அழகாய் தூங்கட்டும்..அவள் படுக்கை அறை சென்று உன்கை தேநீர் வழங்கட்டும்..

உறவது முடிந்த பின்னே உன்பாட்டுக்கு தூங்காதே.. உன்னவள் உன் மார்பில் தூங்க ஓரிடம் கொடுக்க தவறாதே...

தாமதித்து வீடு வந்தால் தகுந்த காரணம் சொல்...

தப்பு உன்னில் இருந்தால் மன்னிப்பு கேள்...

வேலைக்குச் செல்லும் போதும், வேலைவிட்டு வந்த பின்னும் புன்னகை சேர்ந்த முத்தத்தை பூவையவளுக்கு போட்டுவிடு..

சிறப்பான நிகழ்ச்சி எதற்கும் அவளை கூட்டிச்செல்....

எடுப்பான பெண்ணைக் கண்டால் எட்டி நீயும் நின்று கொள்..

நோயிலே அவள் வீழ்ந்தால் பாயாகி விடு...

நோவொன்று அவள் கண்டால் தாயாகி விடு....

உன்னாலே அவள் வடிக்கும் கண்ணீர் ஆனந்தக் கண்ணீராக மட்டும் இருக்கட்டும்..

வேளை வரும்போதெல்லாம் வெளியே அழைத்து செல்..

வேதனை அவள் கொள்ளாமல் விருப்பங்களினை ஏந்தி கொள்..

அவளொரு குற்றம் செய்தால் அணைத்து புரிய வை...அன்னையாக நீ மாறி அவளை திருந்த வை...

அவளின் நட்புக்களை அவள் தொடற அனுமதி..

தலை நரைக்கும் காலத்திலும் சேர்ந்தே உறங்கிடு...

சாகப்போற நேரத்திலும் அவள்கை பிடித்து விடு.