Print this page

பிகினியில் கலக்கும் ஹன்சிகா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஹன்சிகா, தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

. கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் அவர், "கடலை பார்த்து ரொம்ப நாள் ஆகிறது. மனம் முழுவதும் அங்கு தான் உள்ளது" என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Last modified on Monday, 13 April 2020 03:05