Print this page

செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா காதலனுடன் முதன்முறையாக எடுத்த புகைப்படம்!

ஜீ தமிழில் ஹிட் சீரியல்களின் வரிசையில் செம்பருத்தி தொடரும் உள்ளது. TRPயில் சாதனை எல்லாம் செய்த இந்த தொடருக்கான பார்வையாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.

 எனவே சீரியல் குழுவினர் விரைவில் முடிக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வந்தன. இந்த சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஷபானா. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆர்யன் என்பவரை காதலிக்கிறார் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என செய்திகள் வந்தன.

ஆனால் அவர்கள் இருவரும் இருப்பது போல் ஒரு புகைப்படம் கூட வெளியானது இல்லை. தற்போது முதன்முறையாக இருவரும் ஒன்றாக நின்று எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் செம ஜோடி என தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Last modified on Tuesday, 24 August 2021 05:28