Print this page

மகளிர் தின சிறப்பு கிரிக்கெட் போட்டி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிருக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டி நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

‘உதயம்’ அமைப்புடன் இணைந்து மகளிர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த கிரிக்கெட் போட்டியில் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் அணிகள் பங்குபற்றின.

இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான முழுமையான அனுசரணையை ‘உதயம்’ அமைப்பு வழங்கியது.

கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் செம்பியன் கிண்ணத்தை நோர்வூட் TSC அணியும் இரண்டாம் இடத்தை நுவரெலியா ஈகல் அணியும் மூன்றாம் இடத்தை பொகவந்தலாவ யூனிக் லெவல் அணியும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயமும் போட்டியின் சிறந்த வீராங்கனை, தொடரின் சிறந்த வீராங்கனை ஆகியோருக்கு சிறப்பு கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.