web log free
May 20, 2024

ரஷ்யா-உக்ரைன் எல்லை நெருக்கடி - பதறும் அமெரிக்கா

ரஷ்யா - உக்ரைன் இரு நாடுகளுக்கு இடையே எல்லைப்பிரச்சினைகளும் நிலவி வருகிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், உக்ரைனை நேட்டோ அமைப்பில் உறுப்பினராக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.
 
உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா கருதுகிறது. இதனால் கடந்த ஆண்டு நவம்பர் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா அதிநவீன ஆயுதங்கள், போர் தளவாடங்களுடன் தனது படைகளை குவித்து வருகிறது.  இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. 
அவ்வாறு நடக்கும் பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, நேட்டோ படைகள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Defusing the Russia-Ukraine Crisis | Council on Foreign Relations
 
அதேசமயம், உக்ரைன் மீதான போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா - ரஷ்யா இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. போர் பதற்றத்தை தணிக்க முன்வருமாறு ரஷ்யாவுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது. 
 
இந்த  கோரிக்கைக்கு ரஷ்யா எழுத்துப்பூர்வ பதில் அனுப்பியுள்ளது. ரஷியாவின் எழுத்துப்பூர்வ பதிலில் என்ன உள்ளது என்பது குறித்த தகவலை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. பேச்சுவார்த்தை நிகழ்வுகளை பொதுவெளியில் சொல்வது உகந்ததல்ல என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Lethal Weapons to Ukraine: A Primer - Atlantic Council
Russia moves troops to Belarus for joint exercises near Ukraine border |  Russia | The Guardian
 
 
Last modified on Tuesday, 01 February 2022 11:32