web log free
May 20, 2024

மன்னா ரமேஷ் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்

பல கொலைச் சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான "மன்னா ரமேஷ்" என்றழைக்கப்படும் அதிகாரம் முத்யன்சேலாகே ரமேஷ் பிரஜானக இன்று (07) அதிகாலை துபாயில் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

32 வயதான மன்னா ரமேஷ் அவிசாவளையை வசிப்பிடமாகக் கொண்டவர்.

சில மாதங்களுக்கு முன்பு துபாயில் பாதுகாப்பு அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.

மன்னா ரமேஷ் இன்று (07) அதிகாலை 04.43 மணியளவில் டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அதிகளவான அதிகாரிகள் அவருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மன்னா ரமேஷ், விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, சுமார் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பின்னர், மிரிஹான, கொழும்பு தென்மேற்கு மாகாண குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தலைமையகத்திற்கு காலை 08.40 மணியளவில் கடுமையான நிபந்தனைகளுடன் அழைத்துச் செல்லப்பட்டார்.