web log free
February 01, 2025

கமாண்டோவாகிறார் தமன்னா

மிழில் அஜித், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தமன்னா. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், இவர் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சி ஹீரோயினாகவே வலம் வந்துக்கொண்டிருந்த தமன்னாவை இப்படத்தில் ராணுவ கமாண்டோவாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி.

இதுபற்றி அவர் கூறும்போது, ராணுவ பெண் கமாண்டோவாக தமன்னா நடிக்கிறார். விஷாலுடன் இவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கான பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார். குடும்பப் பாங்கான பெண்ணாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

70 சதவீத படப்பிடிப்பு வெளிநாடுகளிலும் மற்ற காட்சிகள் ஜெய்ப்பூர், டெல்லி, ஐதராபாத், சென்னையிலும் படமாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட பணிகள் நடந்துவருகின்றன எள அவர் கூறினார்.

Last modified on Friday, 06 September 2019 15:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd