அட்லி இயக்கத்தில் ஏஜஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ’பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நாளை மறுநாள் பிரமாண்டமாக நடைபெற உள்ளது .
இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படம் திட்டமிட்டபதை விட இரண்டு நாட்கள் தள்ளிப் போகும் என கூறப்படுகிறது.
தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி தீபாவளிக்கு முந்திய வெள்ளிக்கிழமை ’பிகில்’ திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்றும், சரியாக தீபாவளி அன்று ஞாயிறு அன்றுதான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தமிழ் சினிமாவில் ஞாயிறு அன்று வெளியாகும் புதிய முயற்சியை இந்தப்படம் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது