ஒரு அடார் லவ்' என்ற படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கான கண்ணடித்த ஒரே நாளில் புகழ் பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர்.
'ஒரு அடார் லவ்' படத்தின் படப்பிடிப்பு மற்ற வேலைகள் முடிந்து இப்போது வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. அந்தப் படத்தை 'லவர்ஸ் டே' என்ற பெயரில் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
அந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரியா வாரியர், ஒரே நாளில் புகழ் பெற்றதால் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் என்னுடைய பெற்றோர் என்னை வீட்டுச் சிறையில் வைத்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.
“அந்த கண்ணடித்த காட்சி ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் பாடலில் இருந்தது. ஆனால், அது வைரலாகிவிட்டது. என்ன நடக்கிறதென்றே அப்போது குழப்பமாக இருந்தது. சில நாட்கள் எனது பெற்றோர் என்னை வீட்டுச் சிறையில் வைத்துவிட்டார்கள்.
தினமும் பல பத்திரிகையாளர்கள் வீட்டுக்கு வந்து கொண்டேயிருந்தார்கள். கல்லூரியிலிருந்து வந்து தினமும் என்னுடைய யூனிபார்மிலேயே பேட்டிகளைக் கொடுத்தேன். மக்கள் கூட்டத்தைப் பார்த்த பிறகுதான் அந்த வீடியோ எப்படிப்பட்ட சென்சேஷனைப் புரிந்தது என்பதே தெரிந்தது,” என்று கூறியிருக்கிறார்.