web log free
March 14, 2026

அந்த ஆசை அறவே இல்லைங்கோ!

மதுரையில் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஸ்ருதிஹாசன் பங்கேற்றார். 

பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாபி செம்மனூரின் சமூகசேவை பாராட்டுதலுக்குரியது, மக்கள் நீதி மையம் தலைவராக அப்பா கமல்ஹாசனுக்கு என்றும் எனது ஆதரவு உண்டு. ஆனால் அரசியலுக்கு வருகை தரும் எண்ணம் இல்லை. 

அப்பாவின் சமுகம் மீதான நல்லெண்ணம் தற்போது அரசியலில் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவரின் மற்றொரு ரூபம். 

ரஜினி துக்ளக் விழாவில் பேசியது தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை. ரஜினி - கமல் இணைந்து அரசியலில் ஈடுபடுவது குறித்து கருத்து கூறும் அளவிற்கு நான் அரசியல் பார்வையாளர் இல்லை” என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd