இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த நிகழ்ச்சி சிறு தயாரிப்பாளர்களில் நலனுக்காகவே நடத்தப்படுவதாக நடிகர் விஷால் தெரிவித்தார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் சென்னை நந்தனம் ஒய்.சி.எம்.ஏ மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தத்தார்.
அப்போது பேசிய அவர், எதிர்வரும் 2ஆம் திகதி தொடங்கும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 17,0000 ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
3ஆம் திகதி ஹங்கேரி இசைக்கலைஞர்களுடன் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துகிறார். மரபுப்படி ஆட்சியில் இருப்பவர்கள் அழைப்பு, மற்றவர்கள் அழைப்பதில் கருத்து வேறுபாடு இல்லை.
மார்ச் 3ஆம் திகதி நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் சங்க கணக்குகளை சமர்ப்பிப்போம், தயாரிப்பாளர்கள் நலனுக்காகவே நிகழ்ச்சி என்று சந்திப்பில் நடிகர் விஷால் கூறினார்.