web log free
July 12, 2025

பிரபல நடிகரிடமும் சினிமா பிரமுகர் சில்மிஷம்

அண்மையில் திரையுலகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விசயம் Me Too. சினிமாவை சேர்ந்த பெண்கள் பலர் இதில் புகார் அளித்தனர்.

சினிமா பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அளிப்பதாக நடிகைகள் கூறி சர்ச்சையை ஏற்படுத்த சினிமாவை சேர்ந்த பலரின் பெயரும் சிக்கியது.

உலகம் முழுக்க பிரபலமான இந்த டேக்கில் இதுவரை ஆண்கள் மீதே பெண்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில் முதல் முறையாக ஒரு ஆண் மீது மற்றொரு ஆண் மீது புகார் அளித்துள்ளார்.

ஹிந்தியில் முன்னணி நடிகரான ஆயுஷ்மான் குரானா அண்மையில் பேட்டி ஒன்றில் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

இதில் அவர் வாய்ப்புகள் தேடி வந்த போது தயாரிப்பாளார் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், உடனே அவரை தடுத்து நிறுத்தி அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.

Last modified on Wednesday, 06 May 2020 02:35
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd