கடந்த சில வருடங்களாக Me Too என்ற Tag ன் கீழ் சினிமா துறை சார்ந்த பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இதில் சில ஆண் பிரபலங்கள் சிக்கினர். உலக சினிமாவில் தொடங்கி உள்ளூர் சினிமா வரை இதுகுறித்து பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஹாலிவுட் டிவி, சினிமா புகழ் பிரபல நடிகர் டேனி மாஸ்டர் சன் மீது நான்கு பெண்கள் தங்களை அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கடந்த வருடம் புகார் அளித்துடன் வழக்கு பதிவும் செய்தனர்.
ஹாலிவுட் ஹில்ஸ் பகுதியில் உள்ள அவரின் வீட்டில் கடந்த 2001 லிருந்து 2003 வரை அவர் மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 40 வருடங்கள் வரை ஆயுள் தண்டை கிடைக்கும் என சொல்லப்படுகிறது.