நடிகை சமந்தாவை ஸ்பைடர் மேன் போன்று சித்தரித்துள்ள புகைப்படமொன்று தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அடுத்து சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார்.
இந் நிலையில் நடிகை சமந்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் யோகா செய்யும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார், அதில் ”கார்டனிங்கிற்கு பிறகு நான் விரும்பி செய்யும் மற்றுமொரு விடயம் யோகா” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சமந்தா யோகா செய்யும் புகைப்படத்தை ஸ்பைடர் மேனோடு ஒப்பிட்டு ஒருவரால் செய்யப்பட்ட மீம் ஆனது தற்போது வைரலாகி வருகின்றது.
குறித்த மீம் ஆனது சமந்தாவிற்கு மிகவும் பிடித்துப் போனதால் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை பகிர்ந்துள்ளார்.