கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது அபி சரவணன், அதிதி மேனன் திருமணம் தான். அதிதி மேனன் எங்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்கிறார்.
ஆனால் அபி சரவணனோ எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது எனக்கூறி அதற்கான ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்.
இதுகுறித்து இருவரும் பொலிஸ் நிலையம் வரை சென்றனர். இந்நிலையில் தற்போது இருவரும் ரகசியமாக ஒரு அறையில் திருமணம் செய்யும் வீடியோ லீக் ஆகியுள்ளது.
தாலி கட்டுவதை கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து வைத்துள்ளனர்.தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இருவரும் சந்தோஷமாக தாலி கட்டிக் கொண்டதோடு, அதிதி மேனனுக்கு நெற்றியில் குங்குமமிடுவது போன்றும் ஒருவருக்கொருவர் முத்ததத்தை பரிமாறிக் கொள்வது போன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.