நிவேதா பெத்துராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘திமிருபிடிச்சவன்’. அதற்கு பின்னர் ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது நிவேதா பெத்துராஜ் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
மேலும் பிரபு தேவாவுடன் பொன்மாணிக்கவேலு படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபு தேவாவுடன் பொன்மாணிக்கவேலு படத்திலும் நடித்து வருகிறார்.
ஸ்கெட்ச் பட இயக்குநர் விஜய் சேதுபதியை வைத்து இயக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க நிவேதா பெத்துராஜ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜுடன், ராஷி கண்ணாவும் நடிக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யா தேர்வாகியுள்ளார்.
விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் இணையும் இந்தப் படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.