நகைச்சுவை நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் உள்ள பல பிரபல நடிகர்களின் படங்களில் நடித்தார்.
தற்போது, யோகி பாபு ‘தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி’ ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
‘பன்னி குட்டி’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தை ‘கிருமி’ புகழ் அனுசரண் இயக்குகிறார். ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.