நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முக்கிய சங்கங்களான தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளார்.
அரசியலிலும் ஆர்வம் காட்டும் அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைதேர்தலில் போட்டியிட மனு செய்தார். அவர் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
சென்னையில் தொடங்கிய நகைக் கண்காட்சி ஒன்றை விஷால் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது விஷாலிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ‘நாடாளுமன்ற தேர்தல் தினம் இன்னும் அறிவிக்கவில்லை. அதே போல் இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக்கொண்டே இருக்கிறோம். இன்னும் அறிவிக்க வில்லை. முதலில் அறிவிக்கட்டும். அதன் பிறகு என் முடிவை சொல்கிறேன்.
கண்டிப்பாக இந்த தேர்தல் ரொம்ப முக்கியமான தேர்தலாக இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்து தான்’ என்று பதிலளித்தார்.
ரஜினி, கமல் இருவரும் இணைந்தால் நல்லது என்று கருத்து கூறி இருக்கிறீர்கள். கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? என்று கேட்டதற்கு ‘தேர்தல் தினம் முடிவான பின்னர் அதிகாரபூர்வமாக பேசினால் நன்றாக இருக்கும். அப்போது பதில் அளிப்பேன்’ என்று பதில் அளித்தார்.