web log free
September 16, 2025

நேற்று அஜித், இன்று சூர்யா ! ட்விட்டரில் அவர் படைத்த மாபெரும் சாதனை..

சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் எப்போதும் ஹாஷ் டேக் மூலம் தங்கள் நட்சத்திரங்களின் திரைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருவது வழக்கம். மேலும் இதில் நட்சத்திரங்கள் தங்களின் அதிகாரப்பூர்வமான கணக்கை தொடங்கி அவர்களின் கருத்துகள் மற்றும் திரைப்படங்கள் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

இதனிடையே நேற்று கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹாஷ் டேக் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் வலிமை திரைப்படத்தின் ஹாஷ் டேக் தான் முதலிடம் பிடித்தது.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவின் அதிகாரப்பூர்வமான கணக்கை பின்தொடருவோரின் எணிக்கை 7 மில்லியனை கடந்துள்ளது. மேலும் தென்னிந்திய நட்சத்திரங்களில் 7 மில்லியன் Followers-யை மிக வேகமாக பெற்றுள்ளது சூர்யா தான் என்பது குறிப்பிடத்தக்கது

Last modified on Tuesday, 24 August 2021 07:26
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd