web log free
November 25, 2024

மதுபான கடைகளின் திறப்பு சரியானதா ?

நாடு முழுவதும் ஊரடங்கில் முடங்கி இருக்கும் நிலையில் மதுபான கடைகள் மட்டும் கடந்த இரு நாட்களாக திறந்துள்ளது.


இன்றைய காலகட்டத்தில் இலங்கையின் அனைத்து மக்களும் ஒரு வேளை உணவிற்கு கூட பெரும் சிரமப்படும் நிலையில் இந்த மதுபான கடைகளின் திறப்பு சரியானதா என அனைவரும் அரசாங்கத்திடம் நம் கோபத்தை காட்டுகிறோம். இது எந்த விதத்தில் நியாயம் என்பது தொடர்பில் விவாதிக்க வேண்டியது அவசியம்.


அரசாங்கம் மேல் நம் கோபத்தை திருப்ப முதல் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஊரடங்கு உத்தரவை நம்முள் எத்தனை பேர் கடைப்பிடிக்கின்றோம்? ஊரடங்கை சற்றும் பொருட்படுத்தாது உல்லாசமாய் சுற்றி திரிந்தோம். இறுதியில் நமக்கு கிடைத்தது என்ன கொரோனா பொசிடிவ் மட்டுமே! சமூக இடைவெளிகளை கடைப்பிடித்து கொரோனாவை எதிர்க்கொள்வோம் என அரசு வலியுறுத்தியது. நாட்டு மக்களுள் பலர் அதனை கவனத்தில் கூட எடுத்துக்கொள்ளாத நிலையில் இன்று ஊரடங்கையும் கொரோனாவையும் சற்றும் யோசிக்காமல் இவ்வாறு மதுபான கடைகளில் நிறையும் கூட்டங்களுக்கு காரணம் அரசாங்கமா?? இல்லை நம் மக்களா??


முகக்கவசம் அணிவது குறித்து அரசாங்கம் பல வழிகளில் நமக்கு வலியுறுத்தியும் நம்மில் பலர் முக்கவசத்தை நாடிக்கு தான் அணிகிறோம். கேட்டால் முகக்கவசம் அணிவதால் மூச்செடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்கிறோம்.இறுதியில் ஒரேயடியாக நம் மூச்சடங்க நாமே காரணமாகி நிற்கிறோம்.

முகக்கவசம் இல்லாது வெளியே செல்ல தடை என்ற சட்டம் அமுலானதன் பின்னரே முகக்கவசத்தை தேடுகிறோம். இதன் போது மதுபான கடைகள் திறந்தவுடன் அடிப்பட்டு திரளும் கூட்டத்திற்கு அரசாங்கம் மட்டுமல்ல அனைத்து குடிமகன்களும் தான் பொறுப்பு. ஊரடங்கு உத்தரவு காலத்தில் மதுபான கடைகள் மூடியிருந்த நிலையில் கசிப்பு, கல்லசாராயம் என்ற அரசாங்கம் நிராகரிக்கத்த மதுபானங்கள் விற்பனை தலைத் தூக்கியது. எவ்வளவு தான் பொலிசார் அதனை பின்தெடர்ந்து கைது செய்வார்கள்? ஊரடங்கு காலத்தில் மதுபான கடைகள் திறந்தது எவ்வளவு பிழையோ அதே அளவு பிழை மதுபான கடைகள் திறந்தவுடன் வெள்ளமாய் பொங்கி பிண்ணிப் பிணைந்து கட்டிப்புரலும் நம் குடிமகன்கள் செய்கின்றனரே??

அதனை எடுத்து கூறி தடுத்து நிறுத்த நாம் முன்வர வேண்டும். மதுபான கடைகள் திறந்திருந்தால் என்ன? நம் குடிமகன்கள் செல்லாத விடத்து தன்பாட்டில் கடைகள் மூடப்படும். நம் உயிரை நாமே காத்துக்கொள்ள முடியும் முன்வந்து இவ்வாறான நிலைகளை தடுத்தெரிந்தால்.


நம் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நாட்டில் இல்லாத நிலையில் அனைவரும் நாட்டு மக்கள் ஊரடங்கில் அவதிப்படும் போது அவர்கள் மட்டும் தன் குடும்ப சகிதம் நாடு விட்டு நாடு சுற்றுலா செல்லலாமா என கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு பதிலளித்தா நம் அரசாங்கம்?? நம் பிரதமர் கௌரவ ராஜபக்ஷ அவர்கள் இத்தாலிக்கு ஜீ20 மாநாட்டுக்காக சென்றபோதிலும் அவர் நம் நாட்டு கறுப்பு பணத்தை மாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்று எதிர் கட்சி அரசியல் மேடைகளில் பேசுவதையும் நாம் அறிவோம். அதேபோல திடீரென நம் நாட்டின் பணபலம் கொண்ட இலங்கையின் மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மன் அவர்கள் பதவி விலகியதும் அஜித் நிவாட் கப்ரால் பதில் ஆளுநராக பதவியேற்றதும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியது என் பல அரசு தரப்பு வாதங்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் கப்ரால் அவர்கள் தனது முதல் சேவையாக பணம் அச்சிட ஆரம்பித்துள்ளார், நம் நாட்டில் நிலவும் பணவீக்கம் இவ்வாறான செயல்களால் அதிகரிக்குமே தவிர குறையப்போவதில்லை. இதனை நாட்டின் மக்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அவர்கள் மதுபான கடைகளை திறந்தது அரசாங்கத்தின் இராஜ தந்திரம் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

நாட்டின் பெரும் பங்கு வகிக்கும் நாட்டு பிரஜைகளே ஒருவரை ஒருவர் குறைகூறி நம் கடமைகளிலிருந்து விடுபடுகிறோம் இந்நிலையில் நாம் தெரிவு செய்து நாடாளுமன்ற அனுப்பி வைத்த தலைவர்கள் மட்டும் எவ்வாறு நாட்டு மக்களை பற்றி சிந்திப்பார்கள்?? இனி வரும் காலங்களிலாவது நம் தெரிவை சிறப்பாக தேர்ந்தெடுக்க பழகிக்கொள்வோம்.
சற்று சிந்தித்துப் பாருங்கள். யாரையும் யாரும் தப்பு கூறி இங்கு எதுவும் மாறப்போவதில்லை.

 

நாட்டு மக்களாகிய நம் அனைவருக்கும் இது தொடர்பாக சிந்திக்க மற்றும் வாதிட முடியும்.
சற்றே சிந்தியுங்கள் நம் நாடு நமதுரிமை

Last modified on Thursday, 23 September 2021 06:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd