சமீபத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் மதம் மாறும் கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றனர் அந்த வகையில் நடிகர் ஜெய்,பிரபல இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா,நடிகர் சிம்புவின் தம்பி உள்ளிட்டோர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மதத்தினை ஏற்று கொண்டனர். இதனிடையே தற்போது பிரபல நடிகர் விஷால் மதம் மாறிவிட்டார் என்ற செய்தி இணையத்தில் உலா வருகிறது. தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் விஷால் பதிவிட்ட பதிவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நடிகர் விஷால் 2004ஆம் ஆண்டு, வெளிவந்த செல்லமே திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.தற்போது வருடத்திற்கு ஒரு படத்திலாவது விஷால் நடித்து வெற்றி கொடுத்து வருகிறார். சமீபத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான எனிமி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது விஷால்,சுனைனா நடிப்பில் தமிழ் தெலுங்கு இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பேன் இந்தியா படமாக உருவாகி கொண்டிருக்கும் லத்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குனர் ஆர் வினோத் குமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சமீபத்தில் இவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட பதிவு ஒன்று இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் சிம்புவை போலவே 40 வயது கடந்தும் நடிகர் விஷாலும் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாத நிலையில் ரசிகர்கள் விஷாலின் திருமணம் எப்போது என்று கேட்டுக்கொண்டே இருப்பர். ஆனால் அதற்கெல்லாம் செவிசாய்க்காத விஷால், தன்னுடைய திரைப்படங்களை தயாரிப்பதிலும்,நடிப்பதிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிருஷ்ணாவிற்கு சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தற்போது இத்தம்பதிக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மகிழ்ச்சி பொங்க ஒரு பதிவை விஷால் பதிவிட்டுள்ளார். ஆனால் அப்பதிவில் ஒரு சர்ச்சையும் கிளம்பி உள்ளது.
அந்தப் பதிவில், இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும், நான் மீண்டும் மாமா ஆகிவிட்டேன், எங்கள் வீட்டின் இளவரசிக்கு தற்போது குட்டி இளவரசி பிறந்துள்ளார். அந்தக் குழந்தையையும் தம்பதியினரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் இன்ஷா அல்லாஹ் என்ற பதிவை விஷால் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள், இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டதை விஷால் மதம் மாறிவிட்டாரா என்று கேள்வியை எழுப்பியுள்ளனர்.
பொதுவாகவே இஸ்லாமியர்கள் இன்ஷா அல்லா என்ற வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்துவர். ஆனால் ஹிந்து மதத்தில் இருக்கும் விஷால் இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார் என்றால் கட்டாயம் இஸ்லாமிய மதத்திற்கு விஷால் மாறியுள்ளார் என்பதுதான் அர்த்தம் என நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். ஆனால் விஷால் தரப்பிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டார் என்ற எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது. இதனிடையே இப்பதிவு இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.