கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்த போர்ச்சுகல் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில் போர்ச்சுக்கல் உலக கோப்பையை வெல்லும் என்ற தன்னுடைய கனவு முடிவுக்கு வந்து விட்டதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது "போர்ச்சுக்கலுக்கு கோப்பையை வென்று கொடுப்பதே எனது வாழ்க்கையின் மிகப்பெரிய லட்சியக் கனவாகும். கனவு இருக்கும் வரை அழகாக இருந்தது. இந்த கனவுக்காக நான் கடுமையாக போராடினேன். துரதிஷ்டவசமாக என்னுடைய கனவு நேற்று முடிவுக்கு வந்தது."