web log free
April 01, 2026

உசேன் போல்ட்டிற்கு கொரோனா

ஜமைக்கா நாட்டை சேர்ந்த உலக புகழ் தடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து உசைன் போல்ட் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொளி பதிவென்றை விடுத்துள்ளார்.

உசைன் போல்ட் ஜமைக்காவில் வசித்து வருகிறார். இவர் கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுகளை முன்னெடுத்து வந்தார்.

எனினும் சில தினங்களுக்கு முன் அவர் தன் 34வது பிறந்த நாள் விழாவை கொரோனா விற்கான எவ்வித பாதுகாப்பு நவடிக்கைகளும் முன்னெடுக்காது நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியிருந்தார்.

இதன் காரணமாக அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

Last modified on Wednesday, 26 August 2020 00:34
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd