web log free
April 17, 2025

ஒலிம்பிக் வெள்ளிப்பதக்கத்தை ஏலம் விட்ட வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் போலந்து நாட்டை சேர்ந்த 25 வயது வீராங்கனை மரியா ஆந்த்ரேஜிக் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

இதற்கிடையே போலந்து நாட்டை சேர்ந்த 8 மாத குழந்தையின் சிக்கலான அவசர இதய அறுவை சிகிச்சைக்கு நிதி இல்லாமல் தவித்த தம்பதி பேஸ்புக் மூலம் விடுத்து இருந்த வேண்டுகோளை மரியா பார்த்தார்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி முடிந்து 2 வாரத்திற்குள்ளே தனது வாழ்நாள் கனவாக கைப்பற்றிய பதக்கத்தை மரியா ஆன் லைன் மூலம் ஏலத்தில் விட்டார். அதனை அங்குள்ள ஒரு தனியார் நிறுவனம் ரூ.93 லட்சத்துக்கு எடுத்தது அந்தப் பணத்தை அவர் அறுவை சிகிச்சை செய்ய இருக்கும் குழந்தையின் பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.பதக்கத்தை ஏலத்தில் வாங்கிய நிறுவனம் மரியாவின் மிகச்சிறந்த மனதை பாராட்டி அந்த பதக்கத்தை அவரிடமே திரும்ப வழங்க முடிவு செய்துள்ளது.

Last modified on Saturday, 21 August 2021 10:19
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd