web log free
April 01, 2026

சிம்பாம்வேயில் சிக்கியுள்ள இலங்கை மகளிர் அணி

தற்போது சிம்பாம்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கட் அணிக்கு நாடு திரும்புவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.

தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய வகை கொரோனா திரிபு காரணமாக சிம்பாம்வே உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கான விமான பயணத்திற்கு தடை விதித்துள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இலங்கை மகளிர் கிரிக்கட் அணியை இலங்கைக்கு அழைத்து வருவது குறித்து சர்வதேச கிரிக்கட் பேரவையுடன் (ICC) பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும், சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd