நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பதன் மூலம் அரசு நீதித்துறையின் செயல்பாடுகளில் தலையிட முயற்சிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
இதற்கு எதிராக எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஜூலை 23 ஆம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அழைத்துள்ளார்.
ஜூலை 23 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் நாமல் ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும் பங்கேற்பார்கள் என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.



