Homeஉள்நாட்டு செய்திஉதய கம்மன்பிலவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

உதய கம்மன்பிலவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

spot_img

அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்ட கருத்துக்கள் மூலம் மத ரீதியான பதற்றத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தேசிய சைக்கிள் ஓட்டப் பயிற்றுவிப்பாளரும் நடுவருமான, ஜயபுர குரல் அமைப்பின் உறுப்பினரும் தேசிய அறிவுஜீவிகள் அமைப்பின் அநுராதபுர மாவட்ட செயற்பாட்டாளருமான உபாலி ரத்நாயக்க மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழக குரல் அமைப்பின் செயற்பாட்டு உறுப்பினரும் ஓய்வுபெற்ற கணக்காளருமான தீபால் திலகரத்ன ஆகியோர் இந்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளனர்.

கடந்த 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அநுராதபுரம் புனித பூமி பாதுகாப்புத் திட்டம் தொடர்பில் உதய கம்மன்பில பொய்யான மற்றும் ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பௌத்த பிக்குவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் பின்னணியில், இவ்வாறான கருத்துக்கள் மூலம் பௌத்த மக்களைத் தூண்டி, சமூகத்தில் மத ரீதியான பதற்றத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனவே, குறித்த கருத்துக்கள் தொடர்பில் நியாயமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு முறைப்பாட்டாளர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

Latest articles

சட்டத்தின் ஆட்சி தொடர்பான பிரச்சினைகளால் முதலீட்டாளர்கள் தயக்கம்

– எஸ்.எம். மரிக்கார் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பாக நிலவும் பிரச்சினைகள் காரணமாகவே முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருவதற்கு தயக்கம்...

இலங்கையில் சுமார் 75 வீதமான குடும்பங்களுக்கு போதிய வருமானம் இல்லை!

-உலக வங்கி அறிக்கை இலங்கையில் பணவீக்கம் 8 வீதத்தைக் கடந்துள்ள நிலையில், வாழ்க்கைச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், நாட்டின்...

இந்த அரசாங்கம் தோற்கடிக்கப்பட வேண்டும்

– சஞ்சீவ எதிரிமான்ன தற்போதைய அரசாங்கத்தைத் தோற்கடித்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்குவதாகவும், அதற்காகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும்...

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷிரந்தி!

- வைத்தியசாலையில் இருந்து வீடு சென்ற மகிந்த கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி...

More like this