2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் உலக சந்தையில் கோதுமையின் விலை 22.7 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வெளியிடப்பட்ட அரச நிதி நிலைமை தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருங்கடல் ஊடாக மேற்கொள்ளப்படும் தானியப் போக்குவரத்தில் ஏற்பட்ட தடைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவிய வெப்ப அலைகளின் தாக்கம் காரணமாக கோதுமையின் விலை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்பதன் காரணமாக, குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் மற்றும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களின் வறுமை நிலை மற்றும் உணவுப் பாதுகாப்பில் பாரிய தாக்கம் ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




