Homeஉள்நாட்டு செய்திஜனாதிபதி செயலகத்தில் காணாமல் போன 26 வாகனங்கள் தொடர்பான விசாரணை தகவல்

ஜனாதிபதி செயலகத்தில் காணாமல் போன 26 வாகனங்கள் தொடர்பான விசாரணை தகவல்

spot_img

ஜனாதிபதி செயலகத்தில் கடந்த காலத்தில் காணாமல் போன 26 வாகனங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள், 2026 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையிலும் நிறைவு பெறவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

குறித்த மோட்டார் வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தின் பெயரில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், அவற்றின் பௌதீக இருப்பை உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டிலும் கணக்காய்வு அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த வாகனங்கள் ஏதேனும் நிறுவனத்திற்கோ அல்லது தனிநபருக்கோ ஒப்படைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தும் எந்தவொரு எழுத்துமூல ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் தொடர்பாக 2025 ஆம் ஆண்டுக்காக வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

spot_img

Latest articles

ஆறு மாத காலப்பகுதியில் கோதுமையின் விலை 22.7 சதவீதத்தால் அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறு மாத காலப்பகுதியில் உலக சந்தையில்...

அனுராதபுர புனிதப் பிரதேச அபிவிருத்தித் திட்டம் முன்னாள் அட்டமஸ்தானாதிபதியின் கோரிக்கைக்கு அமையவே முன்னெடுக்கப்படுகிறது – ஜனாதிபதி

அனுராதபுர புனிதப் பிரதேசத்திற்கான அபிவிருத்தித் திட்டம், முன்னாள் அட்டமஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன தேரரின் கோரிக்கைக்கு அமையவே நடைமுறைப்படுத்தப்படுவதாக...

மழைக்காலத்துடன் இலங்கையில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு – சுமார் 7,000 பேர் பாதிப்பு!

மகா பருவப்பயிர்ச்செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டில் நிலவும் பருவமழை காரணமாக எலிக் காய்ச்சல் (Leptospirosis) நோய் பரவும் அபாயம்...

நாட்டை நிர்வகிப்பதும் அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்துவதும் எளிதான காரியமல்ல

– அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி ஒரு நாட்டை நிர்வகிப்பதும், அபிவிருத்திப் பணிகளை நடைமுறையில் முன்னெடுப்பதும் எவ்வளவு கடினமான சவால்...

More like this