Homeஉள்நாட்டு செய்திபண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை

spot_img

பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

அத்துடன், பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியைத் தட்டுப்பாடின்றி சந்தைக்கு விநியோகிப்பதுடன், அதன் விலையை மேலும் குறைப்பதற்கும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் உறுதியளித்துள்ளன.

பண்டிகைக் காலத்தில் முட்டை மற்றும் கோழி இறைச்சியைத் தட்டுப்பாடின்றி நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல், வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் கே.ஏ. விமலேந்திரராஜா, மேலதிக செயலாளர் கில்மா தஹநாயக்க, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், முட்டை மற்றும் கோழி இறைச்சி வர்த்தக சங்கங்கள், சிறிய மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் பங்கேற்றனர்.

இதன்போது, சந்தையில் கோழி இறைச்சியின் விலை குறையும் போக்கு காணப்பட்டாலும், முட்டைகளின் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதனடிப்படையில், பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை மேலும் அதிகரிக்காமல் தற்போதைய விலை மட்டத்திலேயே பேணுவதற்கு உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

spot_img

Latest articles

திருமண விளம்பரங்களில் சாதியை குறிப்பிடும் பகுதியை நீக்க நடவடிக்கை

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த புதிய பொறிமுறை அவசியம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மூடநம்பிக்கைகளைப் பரப்பும்...

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் திட்டம் அறிவிப்பு

எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்காக பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள், அத்துடன் சீலமாதாக்கள்...

இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்ற கருத்துக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு

இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்றும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை நீக்கப்பட வேண்டும் என்றும்...

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் குறைவாகவே உள்ளது

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இன்னும் 2018ஆம் ஆண்டில் காணப்பட்ட நிலையை விடக் குறைவாகவே இருப்பதாக பொருளாதார...

More like this