web log free
September 30, 2023

பிரகாசிக்கும் சௌந்தர்யத்திற்கான புதிய ஆயுர்வேத அழகு சாதனங்களை அறிமுகப்படுத்தும் நெச்சுரெலெ சிலோன்

பாரம்பரியமிக்க வரலாற்றுடன் ஆயுர்வேத அழகுசாதன பொருட்களை உற்பத்தி செய்வதில் பெயர்பெற்ற, நெச்சுரெல்லெ சிலோன், இலங்கை பெண்களது அழகினை மெருகூட்ட வடிவமைக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களது புதிய வீச்சினை அறிமுகப்படுத்துவதில் பெருமைக்கொள்கின்றது. மதிப்பிற்குரிய ஆயுர்வேத வைத்தியர் சிஎஸ்எஸ் த சில்வா முதன் முதலாக நெச்சுரெல்லெ நிறுவனத்தை ஆரம்பித்த 1986 ஆம் ஆண்டு முதலான பாரம்பரியம் முதற்கொண்டு, நிறுவனமானது இலங்கையின் நவநாகரீக மங்கையரின் தேவைகளை பூர்த்திசெய்யும் சிறப்பான பொருட்களை புத்தாக்கமாக வழங்குவதனை தொடர்கின்றது.

இப்பரப்பரப்பான நாளாந்த வாழ்க்கை முறையில் தங்களது அழகினை பேணுவதில் இலங்கைப் பெண்களால் எதிர்கொள்ளப்படும் சவால்களை அறிந்த, நெச்சுரெல்லெவானது அவர்களிற்கு உதவ பொருத்தமான பல்வேறு உற்பத்திகளினை திறந்துள்ளது. வல்லாரை, கருவேப்பிலை மற்றும் பூண்டு, அகத்தி, பாகற்காய், கீழாநெல்லி, முடக்கத்தான், கராம்பு மற்றும் மஞ்சல் குளிசைகள் உள்ளிட்ட பன்முக குளிசை தெரிவுகள் ஆரம்ப உற்பத்தி வரிசையை உள்ளடக்குகின்றது.

தங்களது தலை முடியை பராமரிக்கும் அவர்களது அர்ப்பணிப்புகளிற்கு இசைவாக, நெச்சுரல்லேவானது கேசறு ஷாம்பூ, கன்டிஷனர், மற்றும் ஊட்டமளிக்கும் தலைமுடி எண்ணெய் உள்ளடங்கலான பல்வேறு வகையான உற்பத்திகளை அறிமுகப்படுத்துகின்றது. அவர்களது பிரிய சொத்துக்களிற்கென கலவையாக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைகளுடனான இத்தலை முடி பராமரிப்பு பொருட்களானவை முடிக்கு ஆரோக்கியத்தையும் பளபளப்பையும் வழங்குகின்றன.

முழுமையான அழகிற்கான நெச்சுரெல்லாவின் அர்ப்பணிப்பானது, பொருத்தமான லோஷன், பூச்சுக்கள் மற்றும் முக தூய்மையாக்கிகள் தெரிவுகள் என சரும பராமரிப்பிற்கும் விரிகிறது. சருமத்திற்கு முக்கியமாக ஈரப்பதனையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் ரோஸ் மொய்ஸரைசிங் பொடி லோஷன் மற்றும் வெனிவெல் மற்றும் மஞ்சள் பொடி லோஷன் என்பவற்றை உள்ளடக்கியதாக லோஷன்கள் பரந்துபடுகின்றன. பூச்சுக்களது பரப்பானது குங்குமாதி கிரீம், லிகொரைஸ் டே கிரீம், லிகோரைஸ் நைட் கிரீம், வெனிவெல் மற்றும் காட்டு மஞ்சள் குளோவ் மட் பெக், மற்றும் பிக்மென்டேஷன் கிரீம் என்பவற்றை உள்ளக்குகின்றது. இக்கிரீம்கள் தங்களது பாதுகாப்பு மற்றும் ஊட்ட செறிவுகளிற்காக பெயர்பெற்ற மூலிகைகளது சக்தியினை பாதுகாப்பதுடன் தீங்குமிக்க சூரிய கதிர்கள் மற்றும் சுற்றுச்சூழல் அசுத்தங்களிலிருந்து சருமத்தினை காக்கின்றன.

ஒரு முழுமையான சரும பராமரிப்பு ஆளுகையின் நிமித்தமாக, பேஷ் வாஷஸ், கிளீன்சர்ஸ், டோனர்ஸ் மற்றும் ஸ்கிரப்ஸ் எனும் தொடரினை உள்ளடக்கும் முக பராமரிப்பு பொருட்களை நெச்சுரல்லெ வழங்குகின்றது. மென்மையாக சுத்தம்செய்து, புத்துணர்ச்சி வழங்கி, சருமத்தினை புத்துயிர்ப்பெறச்செய்யும் வெனிவெல் மற்றும் காட்டு மஞ்சள் பேஷ் வாஷ், நீம் மற்றும் தேயிலை மர பேஷ் வாஷ், வெனிவெல் மற்றும் காட்டு மஞ்சள் கிளீன்சர், வெனிவெல் மற்றும் காட்டு மஞ்சள் டோனர் மற்றும் வெனிவெல் மற்றும் காட்டு மஞ்சள் ஸ்கிரப் ஆகியவற்றினை கண்டறியுங்கள்.

அனைத்து நெச்சுரலா உற்பத்திகளும் செயற்கை இனிப்புக்கள், பதனாக்கிகள் அல்லது நிறமூட்டிகள் என்பனவற்று இயற்கையான மூலிகைச் சாறுகள் மற்றும் தூள்களினைப் பயன்படுத்தி உன்னதமாக தயாரிக்கப்பட்டனவாகும். கம்பனியானது உயர் சர்வதேச நியமங்களை கடுமையாகப் பின்பற்றுவதுடன், உற்பத்தி செயன்முறையில் தொழினுட்ப மற்றும் இயந்திர நவீனத்துவங்களையும் பயன்படுத்துகின்றது. பயிற்றப்பட்ட வைத்தியரின் உற்பத்தி மேற்பார்வையுடனும்; உள்ளடக்கங்களின் தரங்களை உறுதிப்படுத்துவதற்கான வைத்தியர்கள் மற்றும் இரசாயனவியலாளர்களால் நடாத்தப்படும் பரிசோதனைகளின் ஊடாகவும், அதிசிறந்த நிலைக்கான தன்னுடைய அர்ப்பணிப்புக்களை நெச்சுரலெ நிலைநிறுத்துகின்றது. பொதியிடலிற்கு முன்னதாக மேலதிக தர உறுதிப்பாட்டு நடவடிக்கைகளும் தொழினுட்ப வல்லுநர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.

மூலிகை அழகு பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்பு உற்பத்திக்கான நெச்சுரெலாவின் உற்பத்திக்கு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் ஆயுர்வேத திணைக்களத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கம்பனியின் உற்பத்தி பிரிவானது ஆயுர்வேத மருந்தகமாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் உற்பத்தி பொருட்களது கடுமையான தர நியமங்களை பூர்த்திசெய்கின்றமைக்கான அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தும் விதமாக, புஆP மற்றும் ர்ஊஊP சான்றிதழ்களையும் பெற்றுள்ளது.

நெச்சுரெலா சிலோன் நிறுவனமானது தங்களது இயற்கை அழகினை தழுவிக்கொள்ளவும் அதனது புதிய அழகு சாதனப் பொருட்களுடனான ஆயுர்வேதத்தின் நிலைமாறு சக்தியினை அனுபவபூர்வமாக உணரவும் இலங்கையின் மங்கையரை அழைக்கின்றது. நெச்சுரெலாவினை அறிந்து பிரகாசிக்கும் அழகின் இரகசியத்தை கண்டடையுங்கள்.

பட விளக்கம்: (இடமிருந்த வலமாக)

சாமிக்க விமலசிறி – SGS லங்காவின் தேசிய முகாமையாளர், தர்ஷன டயஸ் - தொழிற்சாலை முகாமையாளர், ஒளசத லங்கா (தனி.) லிமிட்., ஆயுர்வேத வைத்தியர் பிரியதர்ஷன பெந்தோடாராச்சி – பிரதம நிறைவேற்று அதிகாரி, ஒளசத லங்கா (தனி.) லிமிட்., பிரசன்ன ரணவீர – சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்.