web log free
December 10, 2023

300 பட்டக்கீழ் பயிலுநர்களிற்கு புலைமைப்பரிசில்களை வழங்கும் SLTC

என்டெக் 2.0 பதிப்பினூடாக 300 பட்டக்கீழ் பயிலுநர்களிற்கு புலைமைப்பரிசில்களை வழங்கும் SLTC ஆய்வுப் பல்கலைக்கழகம்.

தேசத்தின் மிகப்பெரியதும் கல்விப் புலமையின் அடையாளமுமான அரசசார்பற்ற பல்கலைக்கழகமான SLTC ஆய்வுப் பல்கலைக்கழகமானது 2023-204 ஆம் கல்வியாண்டிற்கான திறமை அடிப்படையிலான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் அறிமுகத்தினை அறிவிப்பதில் பெருமையடைகின்றது.

கல்வி வெற்றியை வளப்படுத்துவதிலான அதன் தொடரும் அர்ப்பணிப்புக்களுடன் ஆய்வுப் பல்கலைக்கழகமானது பலதரப்பட்டவாறான 25 இற்கும் மேற்பட்ட பட்டக்கீழ் நிகழ்ச்சித்திட்டங்களிற்கு 300 இற்கும் அதிகமான புலமைப்பரிசில்களை வழங்குகின்றது.

திறமை அடிப்படையிலான புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமானது தங்களது க.பொ.த. உயர் தரம் மற்றும் கேம்பிரிட்ஜ் அல்லது எட்டெக்ஸல் உயர்தர பரிட்சைகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்த மாணவர்களிற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இப்பெருமைமிகு துவக்கமானது அதிசிறப்பான “சித்தியை பெற்ற மாணவர்களிற்கு அவர்களது கற்கைநெறி கட்டணத்தில் 60% கழிவு வரையில் வழங்குகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்> இலங்கை கல்வித்திட்டத்திலான ஒவ்வொரு ‘A’சித்தியும் ஐக்கிய இராச்சியத்தின் கல்வித்திட்டத்தின் கீழான ஒவ்வொரு ‘A* சித்தியும் மாணவர்களிற்கு அவர்களது கற்கைநெறி கட்டணத்திலிருந்ததான 20% கழிவினைப் பெற்றுத்தரும். குறைந்தபட்ச புலைமைப்பரிசில் விருதும் கூட மொத்த கல்வி கட்டணத்தில் குறிப்பிடத்தக்க 22% குறைப்பினை உறுதிப்படுத்தும்.

என்டெக் 2.0 நிகழ்ச்சித்திட்டமானது 2017 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கற்கைநெறிகளது எண்ணற்ற தகுதியான மாணவர்களிற்கு நம்பிக்கை விளக்காக விளங்கி SLTC ஆய்வுப் பல்கலைக்கழகத்தின் இன்றியமையாத அங்கமாக விளங்குகின்றது. SLTC பல்கலைக்கழகமானது வியாபார முகாமைத்துவ கணக்கீடு மற்றும் தகவல் தொழிநுட்ப பொறியியல் விஞ்ஞான தொழிநுட்ப பீடங்கள் மற்றும் இசைப் பீடம் என்பன உள்ளடங்கலாக ஆறாகப் பிரிக்கப்பட்ட பீடங்களாக்கப்பட்டு இலங்கையின் அனைத்து அரசசார்பற்ற பல்கலைக்கழகங்களிலும் மிகப்பெரிய நிறுவனமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழவினால் அங்கீகரிக்கப்பட்ட ஆகர்சமிக்க 25 பட்டப்படிப்புக்களை தற்போது வழங்குகின்றது.

இலங்கையில் வேகமாக வளரும் பல்கலைக்கழகமாக அறியப்பட்டதும் தென்னாசியாவிலே மிக்க புத்தாகமான பல்கலைக்கழகமாக கொள்ளப்படுவதுமான SLTC ஆய்வுப் பல்கலைக்கழகமானது கல்வித் தராதரங்களை மீள்வடிவமைப்பதனை தொடர்ந்தும் ஆற்றுகின்றது.

SLTC ஆய்வுப் பல்கலைக்கழகமானது அதன் பல்வேறு தனித்துவமான அம்சங்களினால் போட்டிகளிற்கு அப்பால் காணப்படுகின்றது. உலகத்தர நியமங்களை பேணுவதற்கான பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பினில் SLTC இன் கல்வி அதிசிறப்பான தரத்தினை முதன்முதலில் அங்கீகரித்த நிறவனமாக லான்செஸ்டர் பல்கலைக்கழகம் திகழந்ததுடன் டெய்கின் ஜேம்ஸ் குக் RMIT, ஆக்லன்ட் லிங்கன் பல்கலைக்கழகங்கள் போன்ற உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளடங்கலாக மதிப்புமிகு கல்வி பங்குதாரர்களது விலைமதிப்பற்ற வலையமைப்பை அது கொண்டுள்ளது.

SLTC ஆய்வுப் பல்கலைக்கழகமானது கொழும்பு டிரேஸ் எக்ஸ்பேர்ட் சிட்டியில் அமைந்துள்ள சிட்டி கெம்பசுடன் விரிவடையும் பாதுக்கையிலான 35 ஏக்கர் அளவில் பரந்திருக்கும் முழு வதிவிட வளாகத்துடனுமாக கல்வி கட்டமைப்புக்களை வலுவூட்டி வளப்படுத்துகின்றது. பாதுக்கை வளாகமானது பூரண விடுதிகள்  கற்றல் பகுதிகள் விரிவுரை மண்டபங்கள் தனிச்சிறப்பான ஆய்வுகூடங்கள் விளையாட்டு வசதிகள் சிறிய அரங்குகள் மற்றும் பல அம்சங்களுடன் சிறப்பான பல்கலைக்கழக அனுபவத்தினை வழங்குகின்றது.

அதேசமயம் முன்னணி தகவல் தொழிநுட்ப மற்றும் தொழிநுட்ப கம்பனிகளிற்கு மத்தியில் அமைந்துள்ள SLTC இன் சிட்டி கெம்பசானது மாணவர்களிற்கு அவர்களது பட்டக்கீழ் படிப்பினைத் தொடரும் அதேசமயத்தில் உயர்தர பணிச்சூழலை அனுபவிக்கும் தனித்துவமான அனுபவத்தினையும் வழங்குகின்றது.

ஆய்வுப் பல்கலைக்கழகமானது என்டெக் 2.0 புலமைப்பரிசிலிற்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய மற்றும் தகுதியான அனைத்து மாணவர்களையும் அழைப்பதுடன் விருப்பமுடைய விண்ணப்பதாரிகள் ஆய்வு பல்கலைக்கழகத்தின் பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் புலமைப்பரிசில் மற்றும் அதனுடன் இணைந்த கழிவுகள்/ நன்மைகள் குறித்து SLTC இன் உத்தியோகப்பூர்வ வலைத்தளமான www.sltc.ac.lk தளத்திற்கு செல்வதன்மூலமோ This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. எனும் முகவரியில் பல்கலைக்கழத்தினை தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது 011 2100500 எனும் இலக்கத்தில் தொலைபேசி மூலமோ அறியமுடியும்.

 

 

 

 

Last modified on Wednesday, 04 October 2023 04:37