web log free
February 23, 2024

‘EXPORT BAHRAIN’ உடன் கைகோர்க்கும் மக்கள் வங்கி

மக்கள் வங்கி, ஏற்றுமதிகளுக்கான சர்வதேச சந்தைகளைக் கைப்பற்றுவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களுக்கு உதவ '‘EXPORT BAHRAIN’ உடன் கைகோர்த்துள்ளது. 

ஒரு முன்னணி அரச வர்த்தக வங்கியான மக்கள் வங்கி, அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு அமைவாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதித் துறையின் அபிவிருத்தியின் முக்கியத்துவத்தை தெளிவாக இனங்கண்டுள்ளது.

அதற்கமைவாக, சர்வதேச சந்தைகளில் எழுகின்ற வாய்ப்புக்களை சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதற்குத் தேவையான நிதியியல் சார்ந்த மற்றும் நிதியியல் சாராத உதவிகளை வழங்குவதற்காக ஏற்றுமதித்துறை குறித்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக மையங்களை (ஏற்றுமதி மையங்கள்) ஸ்தாபித்து, புதுமையான கோட்பாடொன்றை வங்கி 2023 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியிருந்தது.

இந்த முயற்சியின் கீழ், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகத் துறைக்கு ஏற்றுமதிக்கு முன்னரான நிதி வசதிகள், ஏற்றுமதிக்குப் பின்னரான நிதி வசதிகள், ஆலோசனை சேவைகள், விசேட இணைய வங்கிச்சேவைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. நாடெங்கிலும் ஏற்கனவே ஐந்து ஏற்றுமதி மையங்களை வங்கி ஸ்தாபித்துள்ளது.   

ஏற்றுமதிகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற வங்கியின் இலக்கினை முன்னெடுத்துச் செல்வதற்காக மக்கள் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய அணியொன்று பாஹ்ரென் தேசிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்திச் சபையின் மூலோபாய முன்னெடுப்பான ‘EXPORT BAHRAIN’ சந்தித்திருந்தது.

பாஹ்ரெனில் உள்ள வணிகங்கள் சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் வணிக வாய்ப்புக்களை அணுகுவதற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்படுகின்ற தனித்துவமான தீர்வுகளை வெளிக்கொண்டு வந்து, அவற்றை வழங்குவதனூடாக பாஹ்ரெனை தளமாகக் கொண்ட வணிகங்களின் ஏற்றுமதி வாய்ப்புக்களை மேம்படுத்தி, உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அமைப்பே ‘EXPORT BAHRAIN’ ஆகும்.  

'‘EXPORT BAHRAIN’' பிரதம நிறைவேற்று அதிகாரி சாஃபா ஷரீஃப் ஏ. காலிக் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்புக்கள் பிரிவின் ஸைனாப் மட்ரூக் ஆகியோர் 2024 ஜனவரி 8 ஆம் திகதியன்று மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர்  கிளைவ் பொன்சேகா ஆகியோரை நேரில் சந்தித்தனர். பாஹ்ரெனிலுள்ள இலங்கைக்கான தூதுவரான எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. விஜேரத்ன மென்டிஸ் அவர்களின் முயற்சியால் இந்த உத்தியோகபூர்வ சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. 

மக்கள் வங்கியின் தொழில்முயற்சி வங்கிச்சேவைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கையில் தேயிலை, கறுவா, ஆடையணி, அலங்கார மலர்கள், பதனிடப்பட்ட உணவு, வாசனைத் திரவியங்கள், தேங்காயை மூலமாகக் கொண்ட உற்பத்திகள் அடங்கிய ஏற்றுமதித் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிக முயற்சியாளர்களான வாடிக்கையாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். பாஹ்ரென் மற்றும் இலங்கை நாடுகளிடையே வாணிப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவித்து, ஏற்றுமதிக்கான வாய்ப்புக்களை ஆராய்வதற்கு மிகவும் பயன்மிக்க கலந்துரையாடலில் அவர்கள் ஈடுபட்டனர். 

ஏற்றுமதி நிதி வசதி, ஏற்றுமதி கடன் காப்புறுதி, சர்வதேச புள்ளிவிபரங்களுக்கான அணுகல், நடைமுறைப்படுத்தப்படக்கூடிய சந்தை நுண்ணறிவு, ஏற்றுமதி அனுசரணைகள், விசேட அறிவுபூர்வமான கருவிகள், மூலோபாய மதிப்பீட்டுக் கருவிகள் போன்ற முக்கிய துறைகளில் குறிப்பிட்ட உதவிகளை வழங்குவதனூடாக சர்வதேச வாய்ப்புக்களுக்கான கதவுகளைத் திறப்பதற்கு நுஒpழசவ டீயாசயin வழங்கும் ஏற்றுமதி இலக்குடனான தீர்வுகளை சாஃபா ஷரீஃப் அவர்கள் வலியுறுத்தியதுடன், இந்த முயற்சிகளினூடாக வெற்றிகரமான ஏற்றுமதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான படிகளை உள்ளடக்கி சர்வதேச அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நுண் மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு 'நுஒpழசவ டீயாசயin' எவ்வாறு உதவுகின்றது என்பதையும் அவர் விளக்கினார்.   

சிறிய மற்றும் நடுத்த அளவிலான வணிகங்கள் முகங்கொடுக்கின்ற சவால்கள் மற்றும் அவற்றின் தற்போதைய தேவைகளுக்கு அமைவாக ‘EXPORT BAHRAIN’ எவ்வாறு தீர்வுகளைத் தோற்றுவிக்கின்றது என்பதையும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்களைப் பொறுத்தவரையில் எப்போதும் மாற்றங்கண்டு வருகின்ற ஏற்றுமதிச் சந்தைப் போக்குகள் மற்றும் ஒழுங்குமுறைகளை காலத்திற்கு அமைவானதாக உள்வாங்குவதற்கு எவ்வாறு இது உதவுகின்றது என்பதையும் அவர் விளக்கினார்.

தொழில் முயற்சியாளர்கள் பலருக்கும் தமது உற்பத்திகளுக்கு நிலைபேணத்தகு சர்வதேச சந்தையைக் கண்டறிவது பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படும் நிலையில், வங்கியில் ஏற்கனவே வாடிக்கையாளர்களாக உள்ள மற்றும் புதிதாக வாடிக்கையாளர்களாக மாறுகின்ற ஏற்றுமதியாளர்களுக்கு பாஹ்ரென் சந்தையில் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை வளர்த்துக் கொள்வதற்கு பெறுமதிமிக்க உதவியைப் பெற்றுக்கொள்வதற்காக '‘EXPORT BAHRAIN’ உடன் கைகோர்ப்பதற்கு மக்கள் வங்கி திட்டமிட்டுள்ளது.