web log free
December 25, 2024

SampathCards உடன் இணைந்து 0% வட்டி திட்டங்களுடன் காப்புறுதியை எளிதாக்கும் HNB General Insurance

இலங்கையில் காப்புறுதி தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான HNB General Insurance, வாடிக்கையாளர்களுக்கு வாகன மற்றும் வாகனம் அல்லாத காப்புறுதிகள் ஆகிய இரண்டிலும் 12 மாத, 0% வட்டி திட்டங்களை வழங்குவதற்காக சம்பத் வங்கியுடன் கூட்டுப் பங்காளித்துவத்தை அறிவித்துள்ளது. HNB General Insurance குழுவில் அங்கம் வகிக்காத வங்கியுடனான ஒத்துழைப்பைக் குறிப்பதோடு, இலங்கை முழுவதிலும் உள்ள பரந்த வாடிக்கையாளர்களுக்கு காப்புறுதியை அணுகக்கூடியதாக மாற்றி, அதன் எல்லையை பாரிய அளவில் விரிவுபடுத்துவதை இது காட்டுகிறது.

இந்த கூட்டாண்மை மூலம், சம்பத் வங்கி கடனட்டை வைத்திருப்பவர்கள் தற்போது தங்கள் காப்புறுதிக் கட்டணத்தை தங்களுக்கு ஏற்ற தவணைகளில் செலுத்துவதற்கான வசதியை பெற முடியும். முன்கூட்டிய வட்டிக் கட்டணங்கள் ஏதுமின்றி, வாடிக்கையாளர்கள் தங்கள் வாகன, வீட்டு, பயண, மருத்துவ அல்லது வாகனம் அல்லாத வேறு ஏதேனும் காப்புறுதி திட்ட கட்டணத்தை ஒரு வருட காலம் வரை செலுத்தலாம். இது நிதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அத்தியாவசிய காப்புறுதியை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுகிறது.

HNB General Insurance பிரதம வணிக அதிகாரியும் பொது முகாமையாளருமான சம்பத் விக்ரமாராச்சி இது பற்றி தெரிவிக்கையில், எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த தனித்துவமான நன்மையை வழங்குவதற்காக, இலங்கையில் மிகப் பெரிய வங்கி அட்டை தளத்தையும் விரிவான வலையமைப்பையும் கொண்ட முன்னணி வங்கியான சம்பத் வங்கியுடன் கைகோர்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இந்த ஒத்துழைப்பானது, காப்புறுதியை மிகவும் உள்ளீர்க்கப்பட்டதாகவும், அனைவருக்கும் கட்டுப்படியானதாகவும் மாற்றுவதற்கான எமது உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறது.

முன்கூட்டிய வட்டிச் செலவுகளை நீக்குவதன் மூலம், பெருமளவிலான மக்கள் தமது காப்புறுதியையும், மன அமைதியையும் பெற இதன் மூலம் முடியும் என நாம் நம்புகிறோம். என்றார்.

சம்பத் வங்கியின், வங்கி அட்டை மையத்தின் உதவிப் பொது முகாமையாளர் ஷிரான் கொஸ்ஸின்ன இது பற்றி தெரிவிக்கையில், “எமது வங்கி அட்டை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ‘மதிப்புமிக்க ஒப்பந்தங்களை’ வழங்குவதற்கான வழிகளை நாம் எப்போதும் தேடுகிறோம். HNB General Insurance உடனான இந்த கூட்டாண்மை அந்த இலக்குடன் முழுமையாக ஒத்துப்போகிறது. எமது வாடிக்கையாளர்கள் தமது காப்புறுதிச் செலவுகளை மிகவும் திறம்படவும் வசதியாகவும் நிர்வகிக்க இது உதவுகிறது. என்றார்.

வாடிக்கையாளர்களுக்கான முக்கிய நன்மைகள்:

● 0% வட்டி: உங்கள் காப்புறுதிக் கட்டணத்தின் செலவை 12 மாதங்களுக்குள் எந்தவிதமான வட்டிக் கட்டணமும் இல்லாமல் செலுத்தலாம்.

● பரந்த அளவிலான தயாரிப்புகள்: HNB General Insurance வழங்கும் வாகன மற்றும் வாகனம் அல்லாத காப்புறுதி திட்டங்கள் ஆகிய இரண்டிலும் கிடைக்கிறது.

● வசதி: தடையற்ற அனுபவத்திற்கு உங்களின் நம்பகமான சம்பத் வங்கி கடனட்டையைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

● கட்டுப்படியானது: காலத்துடன் செலவை திட்டமிடுவதன் மூலம் அத்தியாவசிய காப்புறுதியை அனைவரும் அணுகக்கூடியதாக ஆக்குகிறது.

HNB General Insurance ஒரு அர்ப்பணிப்புள்ள பங்காளியாகும். அது இலங்கை முழுவதிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வாகனம் முதல் வாகனம் அல்லாத மற்றும் தக்காபுல் தீர்வுகள் வரை பல்வேறு வகையான காப்புறுதித் தேவைகளை பூர்த்தி செய்கிறது. HNB Assurance PLC இன் துணை நிறுவனமும், HNB குழுமத்தின் ஒரு அங்கத்தவருமான HNB General Insurance பரந்த அளவிலான கிளை வலையமைப்புகளுடன் செயற்படுவதன் மூலம், நாடு முழுவதும் விரிவான சேவையை உறுதி செய்கிறது. Fitch Ratings Lanka Limited இன் ‘A- (lka)’ காப்புறுதி நிதி வலிமை மதிப்பீட்டைக் கொண்ட HNB General Insurance, புத்தாக்கம் மற்றும் பராமரிப்பு மூலம் பங்குதாரர்களுக்கு நிலைபேறான மதிப்பை உருவாக்க உறுதிபூண்டுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd