web log free
December 25, 2024

ICBT – சண்டர்லேண்ட் பழைய மாணவர் சந்திப்பு 2024

இலங்கையின் உயர்கல்வி கட்டமைப்பில், நீண்டகாலமாக தலைமையை வகிக்கும் ICBT கம்பஸானது, அதனது சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் வருடாந்த பழைய மாணவர் கூட்டத்தை கொழும்பு கிங்க்ஸ்பெரி ஹோட்டலில் பெருமையுடன் நடாத்தியது. ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய சண்டர்லேன்ட் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக இரு தசாப்தங்களிற்கும் மேலாக சேவையாற்றும், ICBT கம்பசானது, இந்நன்கறியப்பட்ட ஐக்கிய இராச்சிய நிறுவகத்திலிருந்து தரமான உயர் கல்வியை பெற்றுக்கொண்ட பல்லாயிரக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு அடித்தளமாக விளங்கியது.   

சமீபத்தில் நிறைவுபெற்ற பழைய மாணவர் சந்திப்பானது பட்டாதரிகளிற்கு மீளவும் தொடர்புரவும், அவர்களது பகிரப்பட்ட அனுபவங்களை கொண்டாடவும், மற்றும் வலுவான வலையமைப்பினை பேணவுமாக துடிப்பானதொரு மேடையயை அமைத்துத்தந்தது. இப்பழைய மாணவர்களில் பலர் இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலுமான நிறுவனங்களில் செல்வாக்குமிக்க பதவிகளை வகிப்பதானது, பன்முகப்பட்ட கற்கைநெறிகளுடனான ICBT - சன்டர்லேண்ட் பங்குடைமையின் வெற்றியை எடுத்துக்காட்டுவதாக அமைகின்றது. 

இம்மாபெரும் களியாட்டமானது 100 இற்கும் மேற்பட்ட ICBT –சன்டர்லேண்ட் பழைய மாணவர்களது பங்கேற்புடன் இடம்பெற்றிருந்ததுடன், இந்நிகழ்வானது ICBT கம்பசின் தவிசாளர், கலாநிதி. ஜகத் அல்விஸ், ICBT கம்பசின் நிறைவேற்றுப் பணிப்பாளர் / நிறைவேற்று நிர்வாக பீடாதிபதி/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கலாநிதி சம்பத் கன்னங்கர மற்றும் ICBT கம்பசின் சிரேஷ்ட முகாமைத்துவ குழுவின் ஏனைய உறுப்பினர்களினாலும், அதேவேளை சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் பிரதம நிதி அலுவலர் திரு. பென் டேல், சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அபிவிருத்தி தலைவர் ஜெமி சிம்ப்ஸன், சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தக ஆதரவு துறைத்தலைவர் திருமதி ஏஞ்சலா மேசன், சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் கற்கைகள் துணைத் தலைவர் (CPDனு மற்றும் சர்வதேச தாதியம்) திருமதி கரன் கில்ஸ், சண்டர்லேன்ட் பல்கலைக்கழகத்தின் தாதியத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி எலிசபெத் கிளார்க், சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் தெற்காசியாவிற்கான ஆட்சேர்ப்பு மற்றும் பங்குடைமை பணிப்பாளர், திருமதி பாவ்னா பக்கா, சண்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் பிரதி சர்வதேச ஆதரவு முகாமையாளர், திருமதி ஜுலி பெஸ்கோட் என சன்டர்லேண்ட் பல்கழைக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களினாலும் பெருமைப்படுத்தப்பட்டிருந்தது.  

 “இப்பழைய மாணவர் சந்திப்பானது, இரு தசாப்தங்களிற்கும் மேலாக சன்டர்லேண்ட் பல்கலைக்கழகத்தின் இலங்கைக்கான முன்னணி பிரதிநிதியாக, பல வருடங்களாக எமது மாணவர்களிற்கு தரமானதும் சர்வதேச ரீதியிலானதுமான கல்வியை வழங்குவதிலான எமது வெற்றிகரமான முயற்சிகளிற்கு ஒரு சான்றாக விளங்குகின்றது. உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலுமாக முன்னணி அமைப்புக்களில் பரவியிருக்கும் ICBT – சன்டர்லேண்டின் மாணவர்களது எண்ணிக்கையானது இலங்கை மாணவர்களிற்கு சிறந்த உயர் கல்வியை வழங்குதல் எனும் ஒற்றை நோக்கத்திற்கான எமது தளராத அர்ப்பணிப்புக்களது பிரதியாக விளங்குகின்றது” எனக்குறித்துரைத்தார் ICBT கம்பசின் நிறைவேற்றுப் பணிப்பாளர்/ நிறைவேற்று நிர்வாக பீடாதிபதி/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கலாநிதி சம்பத் கன்னங்கர அவர்கள். 

கார்டியன் பல்கலைக்கழக வழிகாட்டி 2024 இல் சிறந்த 50 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ள, சன்டர்லேண்ட் பல்கலைக்கழகமானது, அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டிணைவுடன் உலகில் முன்னணி ஆய்வுகளை வழங்கி, கல்வி தரத்தினில் 125 வருட பாரம்பரிய பெருமையினை கொண்டுள்ளது. ICBT கம்பஸ் ஊடாக, பல்கலைக்கழகமானது வியாபார முகாமைத்துவம், தாதியப் பயிற்சி, இயந்திர பொறியியல், மின் மற்றும் மின்சாதன பொறியியல், தன்னியக்க பொறியியல் மற்றும் வலையமைப்பு முறைமை பொறியியல் முதலியன உள்ளடங்களாக, பல்வேறு பாடப்பரப்புக்களில் பலவிதமான மட்டங்களில் இளநிலை மற்றும் பட்டப்பின் கற்கைகள் என்பவற்றை வழங்குகின்றது.  

2000 ஆம் ஆண்டினில் தாபிக்கப்பட்ட, ICBT கம்பசானது 65,000 இற்கும் மேற்பட்ட உலகளாவிய பழைய மாணவர்கள் வலையமைப்புடன் இலங்கையின் அதிமுக்கியமான தனியார் உயர்கல்வி நிறுவனமாக விளங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பல்வேறு கம்பஸ்களின் ஊடாக 15,000 மாணவர்களை தற்போது கொண்டிருக்கும், ICBT ஆனது, ஐக்கிய இராச்சியம் மற்றும் அவுஸ்திரேலியாவின் நன்கறியப்பட்ட பல சர்வதேச பல்கலைக்கழகங்களின் நம்பிக்கைமிகு பங்குதாரராக விளங்குகின்றது. சான்றிதழ் கற்கைநெறிகள், டிப்ளோமாக்கள், உயர் டிப்ளோமாக்கள், முற்-பல்கலைக்கழக அடிப்படை கற்கைநெறிகள், இளநிலை கற்கைநெறிகள், மற்றும் முதுநிலை கற்கைநெறிகள் என வழங்கப்படுகின்ற கற்கைநெறிகளானவை பன்முக பாடப்பரப்புக்களின் பல்வேறு மட்டங்களை பூர்த்திசெய்வதாகவுள்ளது.

 

 

Last modified on Sunday, 17 March 2024 06:04
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd