கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, உங்கள் மதிப்பை வென்ற வங்கியான SDB வங்கி, இலங்கையின் நிதித் துறையின் பொருளாதார உந்துசக்தியின் மூலக்கல்லாக திகழ்கின்றது. தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகிய இரு தரப்பினருக்குமான சேவைகளுடன், பாதுகாப்பான மற்றும் நம்பகமான வங்கித் தீர்வுகளை அது வழங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழ், சிங்கள புத்தாண்டின் கொண்டாட்ட உணர்வோடு இணைந்த ஒரு நடவடிக்கையாக, இலங்கையின் கலாசார கட்டமைப்பை ஆழமாக எதிரொலிக்கும் பிரச்சாரத்தை SDB வங்கி ஆரம்பித்துள்ளது. தேசம் ஒன்றிணைந்து நட்பைக் கொண்டாடும் இது தமிழ், சிங்கள புத்தாண்டு காலமாகும். இந்த முயற்சியின் சரியான பின்னணியாக மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை செயற்படுகிறது. இந்த காலகட்டத்தில் அனைத்து சடங்குகளையும் தமிழ், சிங்கள சமூகங்கள் சுப நேரங்களின் அடிப்படையில் கொண்டாடுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அதற்கு அங்கீராமளிக்கும் வகையில், இது ஒரு தனித்துவமான நடவடிக்கையாக, "SDB இத்துறும் சாரித்ரய" (SDB சேமிப்பு சடங்கு) எனும் கருப்பொருளுடனான சேமிப்பு பாரம்பரியத்தை வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இது தொடர்பில் SDB வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் ஹசித சமரசிங்க தெரிவிக்கையில், "SDB வங்கி ஆகிய நாம், சேமிப்புகள் எமது வாடிக்கையாளர்களுக்கு நிதி பாதுகாப்பின் அடித்தளமாக அமைகின்றன என்பதை நன்றாக புரிந்துகொண்டுள்ளோம். 'SDB இத்துறும் சாரித்ரய' என்பது ஒரு பிரசாரத்தையும் தாண்டிய ஒரு முக்கிய விடயமாகும். இந்த நெருக்கடிமிக்க காலத்தில், முக்கியமான சேமிப்பு கலாசாரத்தை மேம்படுத்துவதானது எமது அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். முற்போக்கான நபர்களுக்கான நிதிப் பங்காளியாக இருப்பதிலும், சிறந்த நிதி நடைமுறைகள் குறித்து அவர்களுக்கு தெளிவுபடுத்துவதிலும், தமது எதிர்காலத்திற்காக சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் ஒவ்வொரு இலங்கையருக்கும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்வதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்." என்றார்.
இந்த ஊக்குவிப்பு திட்டமானது, சேமிப்பின் பெறுமதியை வலுப்படுத்துவதற்கும் சமூகத்துடன் நீடித்த தொடர்பை ஏற்படுத்துவதற்குமாக முன்னெடுக்கப்படுகின்றது. புது வருடத்தின் உணர்வானது கொண்டாட்டம் மட்டுமல்லாது அனைத்து இலங்கையர்களுக்கும் பாதுகாப்பான நிதி தொடர்பான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதுமாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
SDB வங்கி பற்றி
எதிர்காலத்துடன் இணைந்து பயணிக்க தயாராக உள்ள SDB வங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான, 360 பாகையிலான ஆதரவை வழங்குகின்றது. SDB வங்கியானது, கொழும்பு பங்குச் சந்தையின் பிரதான சபையில் பட்டியலிடப்பட்டுள்ளதும் BB + பிட்ச் மதிப்பீட்டைக் கொண்ட, இலங்கை மத்திய வங்கியால் ஒழுங்குபடுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் பெற்ற விசேட வங்கியாகும். நாடளாவிய ரீதியில் உள்ள 94 கிளை வலையமைப்பின் ஊடாக, நாடு முழுவதும் உள்ள அதன் சில்லறை வணிக, சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்கள், கூட்டுறவு மற்றும் வணிக வங்கி வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை வங்கி வழங்குகிறது.
SDB வங்கியின் நெறிமுறைகளில் ESG கொள்கைகள் ஆழமாகப் பதிந்துள்ளதோடு, நிலைபேறான நடைமுறைகள் மூலம் உள்ளூர் சமூகங்கள் மற்றும் வணிகங்களை மேம்படுத்துவதில் உறுதியான கவனத்தை அது செலுத்துகிறது. பெண்களை வலுவூட்டல் மற்றும் டிஜிட்டல் உள்ளீர்ப்பை ஊக்குவிப்பதில் முக்கியமான அர்ப்பணிப்பை வங்கி கொண்டுள்ளது.