இலங்கையிலுள்ள அனுமதி உரிமம் பெற்ற முன்னணி வர்த்தக வங்கியான மக்கள் வங்கி, அண்மையில் கொழும்பிலுள்ள ஷங்கிரி-லா ஹோட்டலில் இடம்பெற்ற LankaPay Technnovation Awards 2024 விருதுகள் நிகழ்வில், மதிப்புமிக்க பல விருதுகளை வென்று மகத்துவத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்தும் சிறப்பாக வெளிக்காண்பித்துள்ளது.
வங்கித் துறையில் புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் கொண்டாடிய இந்நிகழ்வில், தலைநிமிர்ந்து நின்ற மக்கள் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளை வழங்கும் தனது அர்ப்பணிப்பை சிறப்பாகக் காண்பித்துள்ளது.
இணையம் மற்றும் மொபைல் வங்கிச் சேவைகளுக்கு அரச வங்கிகள் பிரிவில் மிகவும் பிரபலமான டிஜிட்டல் கொடுப்பனவுத் தீர்வுக்கான தங்க விருது, வாடிக்கையாளர் சௌகரியத்தில் மகத்துவம், ‘A’ பிரிவில் நிதியியல் உள்ளடக்கம் மற்றும் ‘A’ பிரிவில் வருடத்தின் மிகச் சிறந்த Common ATM Enabler ஆகியவற்றுக்கான சிறப்பு விருதுகள் ஆகியன மக்கள் வங்கி வென்றுள்ள விருதுகளில் அடங்கியுள்ளன.
புத்தாக்கமான தொழில்நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முயற்சிகள் மூலமாக வங்கிச்சேவை கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் மக்கள் வங்கியின் ஓயாத அர்ப்பணிப்பை இவ்விருதுகள் காண்பிக்கின்றன.
மக்கள் வங்கியின் புதுமையான மொபைல் வங்கிச்சேவைத் தீர்வான. People’s Wave Mobile App என்பது சிறப்பம்சங்களில் ஒன்றாகும். 2017 ஆம் ஆண்டில் இது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 2.3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இதனை டவுண்லோட் செய்துள்ளதுடன், இலங்கையில் மிகவும் நாடப்படுகின்ற தனிநபர் மொபைல் வங்கிச்சேவை செயலிகளில் ஒன்றாக மாறியுள்ளது.
வங்கியின் மத்திய தொழில்நுட்ப கட்டமைப்புடன் தங்குதடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ள People’s Wave Mobile Appஆனது கணக்கு மீதி விசாரணைகள், கடன்கள், கடனட்டைகள், பயன்பாட்டுக் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள், நிதிப் பரிமாற்றங்கள், மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் தொடர்பான விபரங்கள், அடகு வைத்தல் தொடர்பான விசாரணைகள் மற்றும் பல சேவைகளை தொலைவியக்க முறையில் அடைந்து கொள்ளக்கூடிய வகையில் விரிவான வங்கிச்சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.
இவ்விருதை வென்றுள்ளமை குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச அவர்கள் கருத்து வெளியிடுகையில்,
“LankaPay Technnovation Awards 2024 நிகழ்வில் மதிப்புமிக்க இவ்விருதுகளை வென்றுள்ளமை எமக்கு மிகவும் பெருமையளிக்கின்றது. மகத்துவத்தை நோக்கிய அயராத முயற்சிகள் மற்றும் பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு வங்கிச்சேவை அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்பத்தின் அனுகூலத்தை பயன்படுத்துவதில் எமது அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு இவை சான்றுபகர்கின்றன.
புத்தாக்கத்தின் எல்லைகளை தொடர்ந்தும் விரிவுபடுத்தி, ஒப்பற்ற வங்கிச்சேவை தீர்வுகளை வழங்குவதை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இவ்விருதுகள் எமக்கு உந்துசக்தியளிக்கின்றன,” என்று குறிப்பிட்டார்.
மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,
“LankaPay Technnovation Awards 2024 விருதுகள் நிகழ்வில் நாம் ஈட்டியுள்ள வெற்றி, வாடிக்கையாளர்களின் சௌகரியத்தை மேம்படுத்தி, நிதியியல் உள்ளடக்கத்திற்கு வழிவகுப்பதற்கு புத்தாக்கமான டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகளை வழங்குவதில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. எமது தீர்வுகள் எந்த அளவுக்கு நாடெங்கிலுமுள்ள பயனர்களால் சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்பதற்கு இந்த விருதுகள் சான்றுபகர்கின்றன,” என்று குறிப்பிட்டார்.
சௌகரியம் மற்றும் இலகுவில் அடையக்கூடிய வசதி ஆகியவற்றின் கலங்கரைவிளக்கமாக People’s Wave Mobile App திகழ்ந்து வருவதுடன், வாடிக்கையாளர்கள் தமது வீடுகளிலிருந்து அல்லது வேறு எங்கிருந்தும் 50 க்கும் மேற்பட்ட பல்வகைப்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இது இடமளிக்கின்றது. 2.3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இதனை டவுண்லோட் செய்துள்ளதுடன், இன்னும் பலர் தொடர்ந்தும் செய்து வருகின்ற நிலையில், இலங்கை எங்கிலும் நிதியியல் உள்ளடக்கம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றை வளர்ப்பதில் மக்கள் வங்கியின் அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றது.
வாடிக்கையாளர்களின் சௌகரியம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு சான்றாக, வாடிக்கையாளர் சௌகரியம் மற்றும் நிதியியல் உள்ளடக்கத்தில் மகத்துவம் ஆகியவற்றுக்கான சிறப்பு விருதுகளையும் மக்கள் வங்கி பெற்றுள்ளது. சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வங்கிச் சேவைகளை இன்னும் கூடுதலானவர்கள் அடையப்பெறும் வழிமுறையிலும், பயனர் நேயம் மிக்கதாகவும் வழங்குவதில் மக்கள் வங்கியின் முயற்சிகளை இவ்விருதுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இலங்கை எங்கிலும் நிதியியல் உள்ளடக்கம் மற்றும் சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தனது இலக்கில் மக்கள் வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. அதன் புத்தாக்கமான டிஜிட்டல் வங்கிச்சேவை தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி மீதான ஓயாத அர்ப்பணிப்பு ஆகியவற்றினூடாக வங்கிச்சேவை தொழிற்துறையில் மகத்துவத்தின் தரஒப்பீட்டு நியமங்களை வங்கி தொடர்ந்தும் மேம்படுத்தி வருகின்றது.