சமுதாயத்திற்கென அர்த்தமுள்ள பங்களிப்பினை உருவாக்கும் இதயப்பூர்வமான அர்ப்பணிப்புடன், Asian Paints Causeway ஆனது மாணவர்களிற்கான கனவு கோட்டையாக மாற்றி, முழுப் பாடசாலையையும் வண்ணமடித்து புதுப்பித்து, சங்கட்டிகுளம சிங்கள கனிஷ்ட பாடசாலைக்கு தன்னுடைய உதவும் கரங்களை நீட்டியுள்ளது.
ஆனமடுவ சங்கட்டிகுளம சிங்கள கனிஷ்ட பாடசாலையை, சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களின் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து பெரும்பாலும் வருகைத்தருகின்ற எண்ணிறந்த மாணவர்களின் நேசத்திற்குரிய இரண்டாம் வீடாக விளங்குகின்றது. அர்ப்பணிப்புமிக்க 13 ஆசிரியர்களது குழாத்துடன், பாடசாலையானது பிரகாசமிக்க எதிர்காலக் கனவுகள் துளிர்விடும் சூழலை வழங்குகிறது.
பாடசாலையானது அதனது நூற்றாண்டினை நெருங்கிக்கொண்டிருக்கையில், பெயர் பலகையொன்றுகூட இல்லாத நிலையில், புனருத்தாரனமானது அத்தியாவசியத் தேவையாக காணப்பட்டது. Asian Paints Causeway ஆனது பாடசாலைக்கொரு பெயர் பலகையை தாபித்து, அதனது நூறு வருட வரலாற்றில் முதற்தடவையாக முழுப் பாடசாலைக்கும் வண்ணம்பூசி மாணவர்களிற்கென ஒரு இனிமையான கற்றல் சூழலை மாற்றியதில் பெருமிதம் கொள்கின்றது.
“எமது பாடசாலையின் மாணவர்களிற்கென அற்புதமானதும் இனிமையானதுமான இடமாக எமது பாடசாலையை மாற்றியமைக்காக Asian Paints Causeway க்கு நாம் மிகவும் நன்றிமிக்கவர்களாகின்றோம். எமது மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் பின்தங்கிய குடும்பங்களிலிருந்தே வருவதுடன், கல்வியே அவர்களது ஒரே நம்பிக்கையாக விளங்குகின்றது. இவ்வகுப்பறைகளை எமது மாணவர்கள் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் உத்வேகம் காணும் இடங்களாக மாற்றியமைத்தது சமூகசேவைத் துவக்கமொன்றாக மாத்திரமின்றி, உண்மையான மாற்றத்தினை ஏற்படுத்துவதாகவும் காணப்படுகின்றது” என்றார் ஆனமடுவ சங்கட்டிகுளம சிங்கள கனிஷ்ட பாடசாலை அதிபர், திரு. ஆர்.எம்.டி.பி. ரத்நாயக்க அவர்கள்.
சங்கட்டிகுளமவின் புத்தாக்க செயற்றிட்டமானது, Asian Paints Causeway யின் ‘பஹபர திவி’ எனும் பரந்த கூட்டுத்தாபன சமூக பொறுப்புடைமை செயற்றிட்டத்தின் பல துவக்கங்களில் ஒன்றாகும்.
“மற்றையவர்களின் வாழ்வில் பிரகாசத்தினைக் கொணரும் ஆனந்தமானது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. எமது இச்செயற்றிட்டமானது, சமூகத்தில் நேர்கணிய தாக்கமேற்படுத்துவதிலான எமது ஆசைகளையும் அர்ப்பணிப்புக்களையும் வெளிப்படுத்துகின்றது. பாடசாலை அதிசிறந்த நிலையில் காணப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக தொடரும் ஆதரவுடன், ‘பஹபர திவி’ முன்செல்லும் முயற்சியொன்றாக காணப்படும். ‘உங்களது நம்பிக்கைக்குரிய நிறப்பூச்சு பங்காளராக’ பலரின் வாழ்க்கைக்குள் வண்ணங்களையும் மகிழ்வையும் கொணரும் ஆனந்தத்தினையே நாம் மேற்கொள்கின்றோம்.” என, Asian Paints Causeway யின் சந்தைப்படுத்தல் மற்றும் செயற்படுத்தல் தலைவர், திரு. அனுராத எதிரிசிங்க குறிப்பிட்டார்.
Asian Paints Causeway ஆனது மாணவர்களாலும், பெற்றோரினாலும், ஆசிரியர்களினாலும் பகிரப்பட்ட கதைகளின் மனதுக்கினிய காணொளிப் பதிவுகளையும் உருவாக்கியுள்ளது. இது அவர்களது சமூக ஊடக வலைத்தளங்களில் பொதுமக்களிற்கு கிடைக்கக்கூடியதாக காணப்படுகின்றது.