SDB வங்கியினால் வலுவூட்டப்படும் டிஜிட்டல் வொலட்டான UPayஆனது, வங்கியின் புத்தாக்கமான UPay டிஜிட்டல் வொலட்டுடன்வங்கியின் பணியாட்களது அறிவு மற்றும் ஈடுபாட்டினைவளப்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்குமான ‘UPay with Upay’ உள்ளக பணியாட்களுக்கான போட்டியினை சமீபத்தில் நடாத்தியது.
டிஜிட்டல் சிறப்பினை நோக்கிய வங்கியின் பயணத்தில் முன்னணிடிஜிட்டல் கொடுப்பனவுத் தீர்வு உற்பத்தியொன்றாக UPay இனைமூலோபாய ரீதியில் நிலைப்படுத்துகின்ற அதேவேளை இவ்வுள்ளகபோட்டியானது குழுமனப்பான்மையையும் புத்தாக்கத்தினையும்சிறப்பித்தது. இப்போட்டியானது தொடர்ச்சியான கற்றல் மற்றும்அபிவிருத்தி கலாச்சாரமொன்றினை உருவாக்குவதற்கு வங்கியின்அர்ப்பணிப்பினை அழுந்தக்கூறுவதாகவும் அதற்குபங்களிப்பதாகவும் அமைந்திருந்தது.
இப்போட்டியானது UPay செயலியின் மேம்படுத்தப்பட்டஅம்சங்களை வெளிப்படுத்தும் அதேவேளை ஊழியர்கள்கற்றுக்கொள்வதற்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும்வினைத்திறனாக சேவையாற்றுவதற்கும் வலுப்படுத்துமாறு அதன்முழுமையான அறிவினை அவர்களுக்கு வழங்கும் முகமாகவடிவமைக்கப்பட்டிருந்தது. இத்துவக்கமானது நிதி பரிமாற்றம், விலைச்சிட்டை கொடுப்பனவுகள், மற்றும் QR கொடுப்பனவுகள்போன்ற செயலி பயனாளர் நட்பு அம்சங்களுடன் பழகுவதனைவளப்படுத்துவதற்கும் அதன் பிரபல்யத்தினை மேம்படுத்தும்அதேவேளை செயலியின் பதிவிறக்கம், பதவுசெய்தல், உள்ளகமறறும் வெளியகமெனும் இரண்டிலுமான அனைத்தளாவியஈடுபாட்டினை நகர்த்துவதனையும் நோக்கமாகக்கொண்டிருந்தது.
போட்டியின் சமூக ஊடக ஈடுபாட்டு அத்தியாயமானது போட்டிக்குசுவாரசியத்தினையும் ஊடாட்டு சக்தியினையும் கொணர்ந்தமுக்கியமான அத்தியாயமாகக் காணப்பட்டது. இதுபணியாட்டொகுதியினருக்கு புத்தாக்கமாக சிந்திக்கவும் புத்தாக்கநடைமுறைகளுடன் வெளிவருதற்குமான வாய்ப்பாக அமைந்தது. இது சமூக ஊடக ஈடுபாட்டினை அதிகரித்ததுடன் இதனதுவீச்சினை உள்ளக மற்றும் வெளியக மக்கள் என இருவருக்கும்விஸ்தரித்த UPay இக்கான டிஜிட்டல் பங்கிற்கான குரலைஉயர்த்தியும் பிடித்தது.
SDB வங்கியின் பிரதம டிஜிட்டல் அதிகாரி, தினேஷ் தோமஸ்அவர்கள் “UPay ஆனது விரைவான பரிமாற்றத்தினைஇயலுமாக்கவும் தனது பயனார்களிற்கு பாதுகாப்பானதும்இலகுவானதுமானது மொபைல் வங்கியியல் அனுபவத்தினைவழங்குவதற்காக நவீன பாதுகாப்பு அம்சங்களை வளப்படத்தவும்சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. UPay ஆனது எவ்விததொந்தரவுமின்றி UPay ஊடாக எந்தவொரு வங்கி அல்லதுநிதியியல் நிறுவனத்துடனும் வங்கிச் செயற்பாடுகளைமேற்கொள்ளும் சுதந்திரத்தினை பயனாளர் கொண்டுள்ள“அனைத்து வங்கிகளுக்குமான ஒரு செயலி” எனஅறியப்படுகின்றது.
‘UPay with Upay’ உள்ளக பிரச்சாரமானதுடிஜிட்டல் வங்கிப் பரப்பில் புதிய மைற்கற்களை பதிக்கும்சக்தியையும் புத்தாக்கத்தினையும் உயர்த்தும் UPay செயலியின்முள்ளந்தண்டாக விளங்கும் குழு உறுப்பினர்களதுஅர்ப்பணிப்பிற்கும் புத்தாக்கத்திற்கும் சான்றாக அமைந்தது” எனத்தெரிவித்தார்.
குறித்த நோக்கங்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டசெயற்பாடுகளுடன், புள்ளி அடிப்படையிலான நிகழ்ச்சியொன்றாகக்கட்டமைக்கப்பட்டிருந்த இப்போட்டியில் கிளை வலையமைப்புக்கள்மற்றும் திணைக்களங்களிலிருந்து 100 அணிகளுக்கும் மேற்பட்டபெரும் பங்கேற்பு இடம்பெற்றது. அணிகளானவை அதிசிறப்பானசெயற்பாடுகளுக்கு அளிக்கப்பட்ட போனஸ் புள்ளிகளுடன்ஒவ்வொரு போட்டியினதும் பூர்த்தியின்போதும் புள்ளிகளைப்பெற்றுக்கொண்டன.
சட்டகத்தினை மீளாய்தல் மற்றும்பாரபட்சமற்ற பின்னிணைப்புக்களை வழங்குவதனால்வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்திய சுயாதீன நீதிபதிகள்குழாமொன்றினால் அதிகூடிய புள்ளிகளின் அடிப்படையில் மூன்றுவெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வுச்சகட்டபோட்டியில் நிர்வாக திணைக்களம், திருகோணமலை கிளை மற்றும்மஹபாகே கிளை என்பன முறையே 1ம், 2ம் மற்றும் 3ம் இடத்தினைப்பெற்றுக்கொண்டன.
இப்பிரச்சாரமானது புத்தாக்கம், தொழிலாளர் வலுப்படுத்தல், மற்றும்அதிசிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்துக்கான UPay இன்அர்ப்பணிப்பினது பிரதிபலிப்புக்கு ஒரு தரத்தினைநிர்ணயித்துள்ளதுடன் அத்துடன் 2025 இல் டிஜிட்டல் கொடுப்பனவுபரப்பிற்கான மாற்றத்துக்கான ஒட்டுமொத்த புதிய மட்டத்தினைஅடையவும் எதிர்பார்க்கின்றது.
SDB வங்கி:
வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனிநபரினதும்தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமானஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்குதயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச்ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால்ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்றவிசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவியரீதியில் 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, வங்கியானது நாடுமுழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும்நடுத்தர தொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபாரவங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளின்பொருத்தமான வகைகளை வழங்குகின்றது.
நிலைபேறானநடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும்வியாபாரங்களை உயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனானசுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. வங்கியானதுஇலங்கையை புதிய உயரங்களிற்கு இட்டுச்செல்வதனைநோக்கமாகக்கொண்டு, பெண்களின் வலுப்படுத்தல், சிறியமற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறானஅபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றைமேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.